மேலும் செய்திகள்
நன்கொடை புத்தகங்களை வழங்கும் பணி துவக்கம்
13-Nov-2024
சென்னை: தமிழக அரசு செய்திக்குறிப்பு:தமிழகம் முழுதும் உள்ள 10, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், சிறந்த பாட வல்லுனர்களைக் கொண்டு, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும், மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வு புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 புத்தகங்கள், பிளஸ் 2 மாணவர்களுக்கு 8 என, 11 புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட விற்பனை மையங்களில் விற்கப்படுகின்றன. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அச்சிடப்பட்ட, மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வுப் புத்தகம் அடங்கிய தொகுப்பு, குறைந்தபட்சம் 70 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 175 ரூபாய் வரையான விலையில் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
13-Nov-2024