உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனவர்கள் 14 பேருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

மீனவர்கள் 14 பேருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் இருந்து டிச., 4ல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் பிரிட்டோ, பெட்ரிக்நாதன் ஆகியோரது படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படை வீரர்கள், 14 மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். விசாரணை நாளான நேற்று, மீனவர்கள் 14 பேரையும் போலீசார் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், தண்டனையை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து விடுதலை செய்வதாகவும், 10 ஆண்டுகளுக்குள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்து கைதானால், தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.மேலும், தலா, இந்திய மதிப்பில் 14,500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். கட்டத் தவறினால், மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை ஒட்டி இன்று காலை 11:00 மணி முதல் ஜன., 2 வரை இலங்கை நீதிமன்றத்திற்கு விடுமுறை.எனவே இன்று காலை 11:00 மணிக்குள் அபராத தொகையை செலுத்தி 14 பேரையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை