உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பனங்கிழங்கு உற்பத்தி 15,000 ரூபாய் செலவு; ரூ.1.40 லட்சம் லாபம்!

பனங்கிழங்கு உற்பத்தி 15,000 ரூபாய் செலவு; ரூ.1.40 லட்சம் லாபம்!

பனங்கிழங்கு உற்பத்தியில் ஈடுபட்டு வரும், துாத்துக்குடி மாவட்டம், காயாமொழி பகுதியைச் சேர்ந்த விவசாயி சக்திகுமார்:துாத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்துார், உடன்குடி, சாத்தான்குளம், காயாமொழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள, செம்மண் நிலங்களில் பனங்கிழங்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.ஜனவரி முதல் மார்ச் வரையிலுமான பனங்கிழங்கு சீசனின் போது, இந்த பகுதிகளில் வியாபாரம் களைகட்டும். இங்கு விளைவிக்கப்படும் பனங்கிழங்குகள், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகின்றன.அதிக விற்பனை வாய்ப்பும், நியாயமான விலையும் கிடைப்பதால், பனங்கிழங்கு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் உத்தரவாதமாக கிடைக்கிறது. எங்கள் குடும்பத்துக்கு, 7 ஏக்கர் நிலம் இருக்கு. 2008 முதல் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். 3 ஏக்கரில் பப்பாளியும், 3.90 ஏக்கரில் கற்பூரவள்ளி வாழையும் சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன். மீதி 10 சென்ட் பரப்பில் மட்டும் பார்கள் அமைத்து, பனங்கிழங்கு சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்.இது, செம்மண் நிலம்; இதில் விளையக்கூடிய கிழங்குக்கு தனிச்சுவை உண்டு. இதனால் தான் எங்கள் பகுதியில் உற்பத்தி செய்யப்படுற பனங்கிழங்குகளை, மக்கள் மிகவும் விரும்பி வாங்குகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக, கிழங்கு உற்பத்தியில் ஈடுபட்டுட்டு இருக்கேன்.கடந்தாண்டு, 12,000 பனம்பழங்கள் சேகரித்தேன். அந்தப் பழங்களில் இருந்து, 36,000 விதைகள் எடுத்து விதைப்பு செய்தேன். எல்லாமே நல்லா முளைச்சு வந்தன. விதைப்பு செய்ததில் இருந்து, 90 - 110 நாட்களில் அறுவடைக்கு வந்தன. ஒரு கிழங்கு, 5 ரூபாய் என விற்பனை செய்ததன் வாயிலாக, 1.55 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. 15,000 ரூபாய் செலவு போக, மீதி, 1.40 லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைத்தது.இந்தப் பகுதியில் உள்ள பெண்கள், தங்களோட கை செலவுகளுக்கு வீட்டில் உள்ள ஆண்களை எதிர்பார்க்காமல், வீட்டின் பின் பகுதியில் 500 விதைகள், 1,000 விதைகள் என, குறைவான எண்ணிக்கையில் பனை விதைகளை விதைப்பு செய்து, கிழங்குகள் உற்பத்தி செய்து, வீட்டு வாசலிலேயே விற்பனை செய்து வருமானம் பார்க்கின்றனர்.தொடர்புக்கு: 94443 36353.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை