உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலூரில் அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகை கொள்ளை

கடலூரில் அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகை கொள்ளை

கடலூர்: கடலூர் அருகே அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ராஜா. இவர், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள புது பிள்ளையார் குப்பம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி ஆர்த்தியும் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மருத்துவர் ராஜா நேற்று வீட்டை பூட்டி விட்டு, வழக்கம் போல பணிக்கு சென்றுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3eywftwz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பணி முடிந்து திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 158 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. பின்னர், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M S RAGHUNATHAN
ஜூலை 25, 2025 21:18

இவர் அரசு மருத்துவர். ஆகவே அரசின் விதிப்படி ஒவ்வொரு ஆண்டும் இவருடைய சொத்து மற்றும் கடன் விவகாரம் ஆவணப்.க்ஷபடுத்தி அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். 2024-25 ஆண்டுக்கான விவரம் சமர்பிக்கப்பட்டு இருந்தால் அதில் இந்த நகைகள் விவரம் இருக்கும். இல்லையென்றால்அது கருப்புப் பணத்தில் சேர்க்கப்பட்ட சொத்து.


m.arunachalam
ஜூலை 25, 2025 18:44

யாராவது வாங்கி பெட்டகத்தை உபயோகிக்க ஆலோசனை வழங்கியிருந்தால் நல்லது . தெளிதல் நலம்.


sundarsvpr
ஜூலை 25, 2025 17:37

நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது உண்மை என்றால் திரும்பி கிடைத்தால் அவர்கள் நகைகள் என்பதற்கு என்ன ஆதாரம் காண்பிப்பார்கள் ? அரசு ஊழியர்கள் சொத்து அறிக்கை கொடுப்பார்கள். இதில் நகைகள் வாங்கியதற்கு ஆதாரம் இருக்கலாம். இல்லையெனில் காவல்துறை எப்படி முடிவுசெய்யும்.? நேர்மையான முறையில் சொத்து இல்லையெனில் இவைகளை அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது. தர்மம் ஸ்தாபனங்களுக்கு வழங்கலாம்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 25, 2025 13:48

கொலை ..கொள்ளை ,,கற்பழிப்பு இப்போது மாமூல் வாழ்க்கையாகி விட்டது .. .. கொள்ளையர்கள் எவ்வித பயமுமின்றி எப்படியும் தப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் கொல்லையடிக்கிறார்கள் .. ..இனி அடுத்தவர் பொருளை அவர்கள் அனுமதியிலல்லாமல் எடுப்போர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்படும் ..பொருட்களை திருட்டு கொடுக்க மறுப்போர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் திருடும் வல்லுநர்கள் நியாயவிலை கொள்முதல் நிலையங்களில் ..திருட்டு பொருட்களை .. அதிக லாப விலைக்கு விற்கலாம் ..ரசீதும் பெறலாம் ..என்று விளம்பரம் வரலாம் ..


Ramesh Sargam
ஜூலை 25, 2025 13:23

இந்த செய்தியையும் படியுங்கள். - வேலியே பயிரை மேய்ந்தது போல... பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு போலீஸ்காரர் கைது. தமிழகத்தில் காவல்துறை என்று இருக்கிறதா? அவர்களின் பணி என்னவோ? அறிவுகெட்ட அரசியல்வாதிகளுக்கு கூழைக்கும்பிடு போடுவது மட்டும்தான் அவர்கள் செய்யும் பணி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை