மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 11
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்களை பங்கிட்டுக் கொள்வது குறித்து அ.தி.மு.க., தலைவர்களும், தே.மு.தி.க., தலைவர்களும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது, 10 மேயர் பதவிகளுக்கும் அ.தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்துள்ளது வருத்தமளிப்பதாக தே.மு.தி.க., தலைவர்கள் கூறியுள்ளனர். எங்களுக்கும் இரண்டு மேயர் பதவிகளை ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மதுரை, ஈரோடு மாநகராட்சிகளை ஒதுக்க வேண்டும் என, தே.மு.தி.க.,வினர் வலியுறுத்தியும் உள்ளனர். இவ்விரண்டு மாநகராட்சிகளை விட்டுக் கொடுக்க அ.தி.மு.க., முன்வரவில்லை என்று தெரிகிறது. ஆனால், வேலூர் மாநகராட்சியை தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்க அ.தி.மு.க., முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இறுதி முடிவு எட்டப்படவில்லை. விரைவில் அடுத்தக்கட்ட பேச்சு நடக்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, தே.மு.தி.க., போட்டியிட விரும்பும் நகராட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் குறித்த விவரங்கள் அ.தி.மு.க.,விடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் பிற கட்சியினரும் அவர்கள் போட்டியிட விரும்பும் உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியலை அ.தி.மு.க.,விடம் அளித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் அ.தி.மு.க., குழுவுடன் முதற்கட்ட பேச்சு நடத்தியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளதால், விரைவில் உடன்பாட்டை எட்ட வேண்டுமென கூட்டணிக் கட்சிகள் அ.தி.மு.க.,வை வலியுறுத்தியுள்ளன.
3 hour(s) ago | 11
8 hour(s) ago | 1
10 hour(s) ago | 3