2ஜி ஊழல் : அக்., 22 ம் தேதி குற்றப்பத்திரிகை
புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் வரும் 22 ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் விஷயத்தில் கோர்ட் முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17 ம் தேதி கனிமொழி மீதான ஜாமின் மனு விசாரணைக்கு வருகிறது. நம்பிக்கை மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் இன்று விவாதம் நடந்த போது நீதிபதி ஓ.பி.,சைனி வரும் 22 ம் தேதி குற்றப்பத்திரிக்கை விஷயத்தில் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார்.