உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நேரத்தில் உருவாகிறது 2 காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் அப்டேட்

ஒரே நேரத்தில் உருவாகிறது 2 காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் அப்டேட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 16 மாவட்டங்களில் இன்று (அக்.,18) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வட கிழக்கு பருவ காற்று காரணமாக, வங்கக் கடலில் அடுத்தடுத்த நிகழ்வுகள் உருவாவதற்கான சூழல் நிலவுகிறது. இது, கடலோர மாவட்டங்களுக்கு மழை கொடுக்க வாய்ப்புள்ளது. வடக்கு அந்தமான் கடல் பகுதியில், வரும் 20ல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால், மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வரும் 22ல் உருவாக வாய்ப்புள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=77xgfd2z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது வலுவடைந்து, வட மேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து மேற்கு திசையை நோக்கி நகரும். மேற்கு,வடமேற்கு திசையில் நகரும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்லும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று(அக்.,18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.தமிழகத்தில் நாளை (அக்.,19) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை ஆகிய 14 மாவட்டங்களில் அக்.,20ம் தேதி கனமழை பெய்யக்கூடும்.தமிழகத்தில் நாளை (அக்.,19) முதல் அக்.,24ம் தேதி வரை 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Subramani
அக் 20, 2024 01:17

இந்த புயல் வருவதற்கு வாய்ப்பு இல்லையா


Bala Bala
அக் 19, 2024 19:39

நல்ல news


Mani Kandan
அக் 19, 2024 18:43

ஓகே


Ramesh NG
அக் 19, 2024 15:38

நல்ல செய்திகள் அவப்போது தெரிகிறது


Murugan
அக் 19, 2024 08:41

தமிழ்செய்திகளுக்கு நன்றிகள்


vbs manian
அக் 18, 2024 15:34

எதிர்க்கட்சிகள் செய்ய முடியாததை மழை செய்து காட்டுகிறது.


S Ramkumar
அக் 18, 2024 15:32

எப்பா அடுத்த பூச்சண்டியா வருடா வருடம் பருவ மழை வரும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானால்தான் தமிழகத்துக்கு மழையே . .


தமிழன்
அக் 18, 2024 13:53

மறுபடியும் மேம்பாலத்தில் கார் நிறுத்த அனுமதிப்பார்களா?


தமிழன்
அக் 18, 2024 13:49

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாதபடி ஆட்சி நடத்துவதாக சொல்லும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எவ்வளவு பெரிய புயல் மழை வந்தாலும் சமாளிக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை