உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரட்டை செயலியில் ஒரே நாளில் 20 லட்சம் புதிய பயனர்கள்

அரட்டை செயலியில் ஒரே நாளில் 20 லட்சம் புதிய பயனர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' சுதேசி சமூக வலைதளமான 'அரட்டை' மொபைல் செயலியை நேற்று( செப்., 30) ஒரே நாளில் மட்டும் 20 லட்சம் பயனர்கள் இணைந்துள்ளனர் ,'' அதனை உருவாக்கிய ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் அநியாய வரி விதித்தார். இதனையடுத்து அந்நாட்டை சேர்ந்த சமூக வலைதளங்களுக்கு மாற்றாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட வலைதளங்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து ஸோகோ நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்திய அரட்டை மொபைல் செயலி மீது இந்திய மக்களின் கவனம் திரும்பியது. முதலில் தினமும் சராசரியாக சில ஆயிரம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் சென்றுள்ளது.இது தொடர்பாக ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரட்டை செயலியில் சில மேம்பாடுகளை செய்துள்ளோம். தயவு செய்து அதனை ப்ளேஸ்டோர் மூலம் அப்டேட் செய்யவும். உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி உள்ளோம். நேற்று ஒரே நாளில் மட்டும் 20 லட்சம் பயனர்கள் புதிதாக இணைந்துள்ளனர். உங்களின் அன்புக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சுதேசி சமூக வலைத்தளமான அரட்டை மொபைல் செயலியில் செய்திகளை வழங்கும் முதல் நாளிதழ் தினமலர். நாளிதழ்கள் மட்டுமின்றி, வார இதழ்கள், தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களிலும் முதலாவதாக, தினமலர் நாளிதழ் இந்தப் பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் அரட்டை சேனல் லிங்க்:

https://web.arattai.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஸ்ரீ ராஜ்
அக் 01, 2025 22:44

பாரத தேசத்திற்காக ஒரு சொந்த Operating System such as Windows, iOS, Android, Linux, etc தயார் செய்யும் வரை நாம் அமெரிக்காவை தான் நாடி இருக்கின்றோம்..இது தவிர்க்க முடியாத உண்மை நிலை.


Subburamu K
அக் 01, 2025 20:56

I am using Arattai now Congrats


P.M.E.Raj
அக் 01, 2025 19:04

Install செய்தபின் எனக்கு OTP வரவேயில்லை. பலதடவை முயற்சிசெய்தும் OTP வரவேயில்லை. அதனால் என்னால் பயன்படுத்தமுடியவில்லை.


Sri
அக் 01, 2025 20:53

please try now, yesterday there was some technical issues, it is resolved now


MARUTHU PANDIAR
அக் 01, 2025 21:57

1. தங்கள் மொபைலின் டவர் அதிக பட்சம் கிடைக்கும் இடத்தில் நின்று முயலுதல் நன்று. 2. ஒரே நேரத்தில் பம்லயிரக்கணக்கான/ லட்சக்கணக்கான இன்ஸ்டாலேஷன் முயற்சிகளின் போது நெரிசல் ஏற்படும். மெட்டா அளவுக்கு அரட்டையின் சிஸ்டம் ஒரு ரோபஸ்ட் சிஸ்டமாய் தற்போது இருக்குமா தெரியாது. ஆனால் மீண்டும் முயற்சித்தால் கிடைக்கிறது.


தாமரை மலர்கிறது
அக் 01, 2025 19:02

இந்தியாவிற்கென்று தனியான யு டூப், இன்ஸ்டாகிராம், டிக்டாக், கூகிள், பேஸ் புக், அரட்டை, ஓபன் ஏ ஐ மாடல்கள் தேவை. அமெரிக்காவை நம்பி இருப்பது அறிவிலித்தனம். சீனாவை போன்று அமெரிக்காவின் சமூக வலைத்தளங்களை தடை செய்யவேண்டும். அல்லது வரிகள் அதிகம் போடவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை