2 சிறப்பு ரயில்கள் 28 வரை நீட்டிப்பு
சென்னை:சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் ஷாலிமர், விழுப்புரம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்களின் சேவை, இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே அறிக்கை: ஷாலிமர் - சென்ட்ரல் இடையே திங்கள் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 14 முதல், 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - ஷாலிமர் இடையே புதன் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 16 முதல் 28ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். இதேபோல, விழுப்புரம் - ராமேஸ்வரம் இடையே சனி, ஞாயிறுகளில் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 12 முதல் 27ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.