உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ்

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ்

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.தமிழக அரசு, ஆண்டு தோறும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ் வழங்கி வருகிறது. மற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டும் டான்டீ எனப்படும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் இன்றுவரை போனஸ் அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து இன்று காலை முதல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் செயல்படும் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து. 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழக தேயிலை தோட்டப்பணியாளர்களுக்கு, ரூ.5.72 கோடி செலவில், 20 சதவீத போனஸ் அளிக்கப்படும். இதனால்,3939 தோட்டப்பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.இத்துடன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு ரப்பர் கழகம் மற்றும் தமிழக வனத்தோட்டப்பணியாளர்களுக்கும் ,வனத்துறையின் கீழ் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் ஒரே மாதிரியான 20 சதவீத போனஸ் அளிக்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி