உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2025: 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட்

2025: 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட்

2025ம் ஆண்டில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை நிச்சயம் 200ஐக் கடந்துவிடும். நேற்றுடன் முடிந்த 8 மாதங்களில் இதுவரையில் 175 படங்கள் தியேட்டர்களில் வெளியாகி உள்ளன. ஓடிடியில் ஒரே ஒரு படம் வெளிவந்துள்ளது.

8 மட்டுமே வெற்றி

இந்த 175 படங்களில் ‛‛மதகஜராஜா, குடும்பஸ்தன், டிராகன், குட் பேட் அக்லி, டூரிஸ்ட் பேமிலி, மாமன், தலைவன் தலைவி, கூலி'' ஆகிய 8 படங்கள்தான் வசூல் ரீதியாக லாபகரமான வெற்றி படங்களாக அமைந்துள்ளன. மற்ற 167 படங்கள் தோல்விப் படங்கள் என்பது அதிர்ச்சிகரமான ஒரு தகவல். வெற்றி சதவீதம் என்பது 10 சதவீதம் கூட இல்லாதது வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம்.பல படங்கள் எதற்காக தயாரிக்கப்படுகின்றன என்பது புரியாத புதிர். அந்தப் படங்கள் ஒரு நாளாவது ஓடுகிறதா என்பது கேள்விக்குறி. சில படங்களுக்கு டிரைலர்களைக் கூட வெளியிடுவதில்லை. சில படங்களுக்கு செய்திகளைக் கூட யாருமே தருவதில்லை. சில படங்கள் வெளியான இரண்டு நாட்களிலேயே நன்றி அறிவிப்பு, வெற்றி அறிவிப்பு என சந்திப்புகளை நடத்துகிறார்கள்.விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் வரவேற்பு பெறாத படங்களை 'பெய்டு விமர்சனம்' மூலம் தரமான படம் என விளம்பரப்படுத்துகிறார்கள். இப்படியான நிலைமை இந்த 2025ம் ஆண்டில் அதிகமாகவே உள்ளது.கடந்த 2024ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் 157 படங்கள் வெளியாகின. அதனுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் கூடுதலாக 18 படங்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2024ல் மொத்தமாக 234 படங்கள் வெளியாகி இருந்தன. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை மிஞ்சிவிடும் என்றே சொல்லலாம். எப்படியும் 250 படங்கள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 01, 2025 14:43

திரைப்படங்கள் ஓட விட்டாலோ அல்லது வசூல் ரீதியாக வெற்றி பெறா விட்டாலோ அல்லது தயாரிப்பாளர்களுக்கு இலாப கரமாக இல்லா விட்டாலோ இந்திய பொருளாதாரம் ஒன்றும் மூழ்கி விடாது. திரைப்படங்களால் எந்த நன்மையும் இல்லை எந்த பிரையோசனமும் இல்லை. திரைப்படங்கள் ஓடவில்லை டிவி சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் இல்லை என்றால் உண்மையிலேயே நாட்டிற்கு நாட்டு மக்களுக்கு மிகவும் நல்லது தான்.


Natchimuthu Chithiraisamy
செப் 01, 2025 14:15

வெட்டியாக பொழுது போக்கு என்று சொல்லி மரணவேதனையை அனுபவித்து, சோறு தின்னும் போது கூட விவசாயியை நினைப்பதில்லை. வெட்டியாக போகும் பணத்தை பொது நீர் மேலாண்மைக்கு பயன்படுத்தலாம்.


ஆரூர் ரங்
செப் 01, 2025 14:01

முன்பு ஒரே ஒரு திரைப்படக் கல்லூரி மட்டும் இருந்த போது அவர்கள் ராசியில்லாதவர்கள், மிக மெதுவான ஆர்ட் ஃபிலிம் எடுப்பார்கள் என உதறித் தள்ளப்பட்டனர். இப்போ ஊருக்கு நாலு விஸ்காம் பட்டதாரிகள். நிலம் நீச்சை விற்று படமெடுக்கிறார்கள். வாசிப்புப் பழக்கம், கதையறிவில்லாமல் படமெடுத்து எல்லாவற்றையும் இழக்கிறார்கள். ஒரு சின்னப் படத்தை பிரமோட் செய்யக்கூட கோடிக்கு மேல் செலவாகிறது. வாரத்துக்கு 5 படங்கள் ரிலீஸ் என்பதால் அரங்கங்கள் கிடைப்பதில்லை.


sureshpramanathan
செப் 01, 2025 13:38

DMK money laundering business is taking movies


ASIATIC RAMESH
செப் 01, 2025 13:04

பெரும்பாலும் முறைக்கேடான வருமானத்தில் எடுப்பது...


Naresh Kumar
செப் 01, 2025 13:01

எல்லாம் கருப்பு பணத்தை வெள்ளையாக்க வேண்டிய தந்திரம் தான் வேறு என்ன .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை