உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  20.5 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு காப்பீடு

 20.5 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு காப்பீடு

சென்னை: தமிழகத்தில் நடப்பு சம்பா பருவத்தில், 20.5 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு மாவட்டங்களில், நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையால், பல ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பருவமழை காலம், டிசம்பர் இறுதி வரை நீடிக்கும். பருவம் தவறிய மழை, ஜனவரி மாதம் பெய்வதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, சாகுபடி செய்த விவசாயிகளை, பயிர் காப்பீடு செய்ய வைப்பதற்கான முயற்சிகளில் வேளாண் துறையினர் இறங்கினர். தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள், கட்டாயத்தின் அடிப்படையிலும், கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் அடிப்படையிலும், காப்பீடு செய்துள்ளனர். காப்பீடு செய்வதற்கான கால அவகாசம், 30ம் தேதியுடன் முடிந்தது. அதன்படி, சம்பா பருவத்தில், 20.5 லட்சம் ஏக்கரிலான பயிர்களுக்கு, 8.50 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். கடந்த ஆண்டு, 18.2 லட்சம் ஏக்கரிலான பயிர்களுக்கு, 8.06 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்திருந்தனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டு, இரண்டு லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு, கூடுதலாக காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. வேளாண் துறை முயற்சியால், நடப்பாண்டு, 44,000 விவசாயிகள் கூடுதலாக காப்பீடு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை