உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 22 பேரிடம் புது வகையாக சைபர் கிரைம் மோசடி

22 பேரிடம் புது வகையாக சைபர் கிரைம் மோசடி

சென்னை: உணவு டெலிவரிக்கு பயன்படுத்தும் செயலிகளில் மர்ம நபர்கள் ஊடுருவதாக கூறி, 22 பேரிடம் சைபர் கிரைம் குற்றவாளிகள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வாரத்தில் இந்த மோசடிகள் நடந்துள்ளன.இதுகுறித்து, தமிழக சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய்குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:வீடு மற்றும் அலுவலகம் என, இருப்பிடங்களுக்கு வந்து உணவு டெலிவரி செய்ய, சில செயலிகளில், 'ஆர்டர்' செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இது தவிர்க்க முடியாத நிலைக்கும் சென்று விட்டது.இதை சைபர் கிரைம் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த துவங்கி விட்டனர். அவர்கள் தற்போது புதுவிதமான மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.சைபர் கிரைம் குற்றவாளிகள், பொது மக்களின் மொபைல் போன் எண்களுக்கு அழைக்கின்றனர் அல்லது ஐ.வி.ஆர். எனும் குரல் பதிவு வாயிலாக தொடர்பு கொள்கின்றனர்.நீங்கள் உணவு டெலிவரிக்கு பயன்படுத்தும், செயலியின் நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் செயலியில் மர்ம நபர்கள் ஊடுருவி இருப்பது எங்களுக்கு தெரிய வந்துள்ளது.அவர்கள் பண பரிவர்த்தனைக்கு நீங்கள் செயலியில் வைத்திருக்கும், 'வாலட்' தொகை எடுக்க முயற்சி செய்துள்ளனர் என, தெரிவிக்கின்றனர்.நீங்கள் பதற்றம் அடைய வேண்டாம். பண மோசடிக்கு முயன்ற மர்ம நபர்களின் செயலை முறியடித்துள்ளோம். அவர்கள் மீண்டும் ஊடுருவாமல் இருக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். அதற்காக நாங்கள் உங்கள் மொபைல் போன் எண்ணிற்கு, 'ஒன்' என்ற அனுப்புவோம்.அதை நீங்கள் மீண்டும்எங்களுக்கு அனுப்புங்கள். உடனடியாக ஒ.டி.பி. எண் வரும் அதையும் எங்களுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு சிரமம் என்றால் நாங்கள் தொடர்பு கொள்கிறோம் என்று கூறுகின்றனர்.பதற்றத்தில் ஒ.டி.பி. எண்ணை தெரிவித்தால், உங்கள் மொபைல் போனையும், சைபர் கிரைம் குற்றவாளிகள் அவர்களின் மொபைல் போனையும் இணைத்து விடுகின்றனர்.அப்போது, வாலட் தொகை மற்றும் செயலியில் நீங்கள் வங்கி கணக்கை இணைத்து இருந்தால் அதில் உள்ள தொகையையும் மோசடி செய்து விடுகின்றனர்.அந்த வகையில், தமிழகத்தில், ஜன. 1 - 8 வரை, 22 பேரிடம் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஒ.டி.பி.எண்களை தெரிவிக்க வேண்டாம்.மோசடி நபர்கள் குறித்து, 1930 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கும், www.cybercrime.gov.inஎனும் இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 13, 2024 14:16

டெபிட் கார்டு அல்லது கூகிள் பே போன்ற செயலிகள் போதும். நாம் என்ன வாங்குகிறோம் என்பது நமக்கு தெரியும். அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். மற்றபடி பணம் கேட்கும் அல்லது உதவி செய்வதாக வரும் போன் கால்கள் எல்லாவற்றிற்கும் கட் செய்வது, பிளாக் செய்வது போதும். உடனே வங்கி வேண்டாம், கார்டு வேண்டாம், யு.பி.ஐ. வேண்டாம் என்று குதிப்பது அறிவீனம். தவறை நம்மிடம் வைத்துக்கொண்டு ஆப் கள் மீது குறை சொல்வது தவறு.


R S BALA
ஜன 13, 2024 13:53

எல்லா வகையானா ஏமாற்றும் கடைசியில் OTP யில் தான் வந்து முடிகிறது வேறு எந்த வகையிலும் முடிவதில்லை இந்த வகையான ஆன்லைன் திருடர்கள் இதற்குதான் மாற்றி மாற்றி யோசித்து செயல்படுகிறார்கள். இதற்க்கு எத்தனையோ விழிப்புணர்வு செய்திகள் அந்தந்த செயலி நிறுவனங்கள் தினசரி எச்சரிக்கை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது அதனை மீறி ஏமாறுபவர்கள் மீதுதான் தவறு ஏமாற்றுபவன் பல இடங்களிலும் இருக்கதான் செய்வான். அலர்ட் ஆறுமுகமாக எப்போதும் இருக்கவேண்டியது நாம்தான்.


குணா
ஜன 13, 2024 10:47

அடுத்து கையில நெறைய காசு வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெரியாதவன் ஹோட்டலுக்கு போவ ஆரம்பிச்சார்... அடுத்து TV பாத்துகிட்டே திங்கலாம்னு ஹோட்டல்ல இருந்து வீட்டுக்கு கொண்டு போயி சாப்பிட்டார்கள்


VENKATASUBRAMANIAN
ஜன 13, 2024 08:55

யாருக்குமே ஓடிபி எண்ணை கொடுக்க கூடாது.


K.Rajasekaran
ஜன 13, 2024 08:29

1930 useless number, nobody answer


Kasimani Baskaran
ஜன 13, 2024 07:25

ஓடிபி எண்ணை கொடுக்கும் அளவுக்கு ஏமாளிகளாக இருந்தால் என்ன செய்ய முடியும்...


Ramesh Sargam
ஜன 13, 2024 06:58

மக்கள் இந்த செயலிகளை அறவே மறந்து மீண்டும் நேரில் போய் வாங்குவது, பணபரிமாற்றம் செய்வது போன்றவற்றை துவங்கவேண்டும். செயலிகளை நம்பாதீர்கள்.


D.Ambujavalli
ஜன 13, 2024 06:48

கண்டவர்களும் அனுப்பும் மெசேஜ்களை அவ்வப்போழுதே டேலிட் செய்துவிட்டு, அந்த எண்களையும் பிளாக் செய்துவிட வேண்டும் இணைய வழிப் பரிமாற்றத்தால் குற்றங்களுக்கும் நிறைய வழி கிடைக்கிறது


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ