வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சரியான யோசனை. இதுமாதிரி டாஸ்மாக்கையும் இருபத்து நாலு மணி நேரமும் தொறந்தே வச்சு ஷிப்ட் முறையில் இயக்கணும் சாமியோவ்
சென்னை:'நாள் முழுதும் படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும்' என, தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பெரிய நடிகர்கள் படம் தியேட்டரில் வெளியான எட்டு வாரத்திற்கு பின்னரும், மற்ற நடிகர்களின் படங்கள் ஆறு வாரத்திற்கு பின்னரும் தான், ஓ.டி.டி.,யில் வெளியிட வேண்டும். தியேட்டர் பராமரிப்பு கட்டணத்தை, டிக்கெட் கட்டணத்தில் இருந்து, 10 சதவீதம் வசூலிக்க அனுமதி தர வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளது போல, தமிழகத்திலும், 24 மணி நேரமும் படங்களை திரையிட, அரசு அனுமதிக்க வேண்டும். 'மல்டிப்ளக்ஸ்' திரையரங்குகளுக்கு, 250 ரூபாய் வரையும், 'ஏசி' திரையரங்குகளுக்கு 200 ரூபாய் வரையும், 'ஏசி' அல்லாத திரையரங்குகளுக்கு 150 ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.மால்களில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரப்படுவது போல், தியேட்டரிலும் மற்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தர வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சரியான யோசனை. இதுமாதிரி டாஸ்மாக்கையும் இருபத்து நாலு மணி நேரமும் தொறந்தே வச்சு ஷிப்ட் முறையில் இயக்கணும் சாமியோவ்