உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காரில் கடத்திவரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்

காரில் கடத்திவரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம்: தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை, ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு காரில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தெலுங்கான மாநில காரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நிறுத்தியபோது காரில் இருந்தவர்கள் காரை விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இதையடுத்து காரை சோதனை செய்தபோது காரில் 250 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.கஞ்சாவை பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தப்பி ஓடிவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sudha
பிப் 12, 2025 18:05

என்ன ஒரு தெனாவட்டு இருந்தால் தெலுங்கானாவிலிருந்து ராமேஸ்வரம் வரை பிடிபட மாட்டோம் என்ற தைரியத்தில் வருவார்கள்?


சின்ன சுடலை ஈர வெங்காயம்
பிப் 12, 2025 15:31

பிடிபட்டது ஒரு கார் தானா? மீதி...


Baskar
பிப் 12, 2025 13:57

அப்பா பிடிச்சதே, பெரிய வெற்றி


Ramesh Sargam
பிப் 12, 2025 12:40

திமுக ஆட்சியில் இப்படி மேலும் பலப்பல விசித்திரம் நடக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை