உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் பிரசாரக் கூட்டநெரிசலில் சிக்கி 36 பேர் பலி; இன்றிரவே கரூர் விரைகிறார் முதல்வர்

விஜய் பிரசாரக் கூட்டநெரிசலில் சிக்கி 36 பேர் பலி; இன்றிரவே கரூர் விரைகிறார் முதல்வர்

கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்றிரவே தனிவிமானம் மூலம் கரூர் செல்ல இருக்கிறார்.நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக் கொண்ட தவெக தலைவர் விஜய், அடுத்ததாக கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால், விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, சிலர் மயங்கி விழுந்தனர். இதனைப் பார்த்த விஜய் உடனே தண்ணீர் பாட்டில் கொடுத்து உதவினார். அதன்பிறகு, விஜய் தனது உரையை நிகழ்த்தினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1igv7fr9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விஜய் உரையை முடித்து கிளம்பும் போது, தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், சிக்கிய பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்து விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். மேலும், 30க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, முதல்வர் உத்தரவின் பேரில் கரூர் அரசு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்றுள்ளார். மேலும், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மகேஷ் ஆகியோரும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அதேபோல, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் மருத்துவமனைக்கு நேரில் செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும், கரூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைக்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். மேலும், கரூர் நிலவரம் குறித்து கலெக்டர் தங்கவேலுவிடம் முதல்வர் கேட்டறிந்தார். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்;கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் சுப்பிரமணியன், கலெக்டரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன். அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபியிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது; கரூர் அரசு மருத்துவமனைக்கு பலரது உடல்கள் இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டுள்ளன. இவர்கள் பிரசாரக் கூட்டத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் உள்ளவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. 45க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சம்பவ இடத்தில் இருந்து இன்னும் சடலங்கள் வரலாம் என்றும் அச்சத்தில் உள்ளோம், இவ்வாறு கூறினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் இன்று இரவே கரூர் செல்ல இருக்கிறார். பிரதமர் மோடி இரங்கல்கரூர் துயர சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு வலிமை கிடைக்கவும், காயம் அடைந்தவர்கள் குணம் அடையவும் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 85 )

Ramesh Sargam
செப் 28, 2025 01:08

22 ஏப்ரல் 2025 பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றலா பயணிகள் இறந்தபோது பரிதாபப்பட்டோம், வேதனைப்பட்டோம், நெஞ்சு வலித்து கஷ்டப்பட்டோம். ஆனால் இங்கு நடந்த கூட்ட நெரிசலில் கூட 36 பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால் இந்த இறப்புக்கு வருத்தம் தெரிவிக்கலாம். ஆனால் பரிதாபப்பட முடியவில்லை. மன்னிக்கவும் அப்படி கூறியதற்கு. இதற்கு முன்பு நடந்த அரசியல் பொதுக்கூட்டங்களில் கூட பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் ஒரு சில கூட்டங்களில் இறப்பும் ஏற்பட்டிருக்கிறது. அதைப்பார்த்தாவது மக்கள் திருந்தியிருக்கவேண்டும். சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் பின் சுற்றுவதை முற்றிலும் நிறுத்தவேண்டும். இனியாவது திருந்துவார்களா? சந்தேகம்தான்.


NACHI
செப் 28, 2025 00:42

திமுகாவின்...சதி 100%....செந்தில் பாலாஜி கேடி...கர்மா சும்மா விடாது


ramesh
செப் 28, 2025 11:11

விஜய் கூட்டம் செய்த தப்புக்கு dmk சதி நல்லா இருக்கு உன் கருத்து நாச்சி . சாவிலும் அரசியல் பண்ணுகிறாயா


Kannan Chandran
செப் 28, 2025 00:22

கூட்டத்தில் இறந்த பிஞ்சு குழந்தைகளை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது, அந்த தற்குறி பெற்றவர்களுக்கு முதலில் தண்டனை அளிக்கவேண்டும்..


உண்மை கசக்கும்
செப் 28, 2025 00:02

நிச்சயமாக விஞ்ஞான கொலைகள். பத்து ரூபாய் பாட்டில் பாட்டு பாடி பத்தே நிமிடத்தில் சம்பவம் ஆரம்பிக்கிறது. கூட்டத்தின் உள்ளே ஊடுருவிய 20000 ரூபாய் கூலிகள் செய்த மனிதாபிமானமற்ற செயல். 356 உடனடி நடவடிக்கை. மிக பெரிய சதி. அனைத்து அல்லக்கைகளின் கைபேசி பதிவுகளை ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.


தமிழன்
செப் 27, 2025 23:53

அதெப்படி கருரில் மட்டும் உயிரிழப்பு? மற்ற ஊரில் இல்லை. இது அணிலின் பக்கா பினான். Dmk குண்டர்கள் 5000 பேரை கூட்டத்துள் ஊடுறுவ விட்டு தள்ளுங்க முள்ளுவை ஏற்படுத்தி அப்பாவிகளை கொன்றுவிட்டார்கள். பழி விஜய் தலைமேல். சம்பவம் நடந்து 10 நிமடத்துக்குள் அணில் புல் மேக்கப்புடன் GH க்கு ஆஜர் இது எப்படி சாத்தியம். CM உடனே தலைமைச்செயலகம் வருகிறார் அதற்குள் விசாரனை கமிஸன் அமைக்கப்படுகிறது என்னமோ விஜய் படத்தில் வரும் காட்சிகள் போல உள்ளது பொல்லாத அரசியல்வியாதிகள்


Sudha
செப் 27, 2025 23:45

பாலாஜி தி ஒன்லி ஒன்லி


Mr Krish Tamilnadu
செப் 27, 2025 23:41

மிகப்பெரிய சோகம். இந்த சோகத்தை எந்த காரணம் கூறியும் சமாதானம் செய்து கொள்ள முடியாது. இனி இது போன்ற துயரம் நடக்காமல் பாதுகாப்பு செய்ய வேண்டியது நமது கடமை. த.வெ.க வை பொறுத்த வரை, இடம் தேர்வில் சமரசம் செய்ய கூடாது. முப்பெரும் விழா நடந்த இடத்தை பயன்படுத்தி இருக்கலாம். ஆளும் அரசு தர மறுத்தால், மீட்டிங் கேன்சல் செய்து இருக்க வேண்டும். நேர கணக்கீடு ரொம்ப முக்கியம். நேர தவறும் போது, முதலுதவி, தண்ணீர் போன்ற ஏற்பாடு செய்து இருக்க வேண்டும். த.வெ.க தனது நெருடல் போக்க இந்த 36 குடும்பங்களை தத்து எடுக்க வேண்டும். அடுத்து, ஆளும் அரசு - ரங்கநாதர் சொர்க்க வாசல் கூட்ட நெரிசல், திருவிழா விபத்துக்கள் பல பார்த்து உள்ளது. த.வெ.க கூட்டத்தையும் பார்த்து உள்ளது. இரு மாநாடு, திருச்சி, நாகப்பட்டினம் என இரு மக்கள் சந்திப்பு. ஆகவே காழ்ப்புணர்ச்சி இன்றி எஸ்காட் போலீஸ் உடன் குறித்த நேரத்தில் மீட்டிங் செல்ல, திருப்ப உதவி இருக்கலாம். ஏதாவது நடக்கட்டும் என காத்திருந்தது போல் உள்ளது. மக்கள் பொறுப்பு தற்போதைக்கு ஆளும் கட்சியுடையது. அரசியல் கருத்துகளில் வேறுபட்டு இருந்தாலும், மக்கள் பாதுகாப்பில் ஒன்றுபட்டு அனைத்து கட்சிகளும் பயணிக்க வேண்டும்.. அடுத்து - இதில் ஏதேனும் சதி இருந்தாலும், நிச்சயம் கண்டுபிடிக்க பட்டு தண்டிக்க வேண்டும். ஆம்புலன்ஸ் அந்த நேரத்தில் அங்கு ஏன் வந்தது?.கூட்ட நெரிசலை அதிக படுத்தவா? பவர் கட்?. அனைத்தும் ஆய்வு செய்ய பட வேண்டும். த.வெ.க தலைவர் மாநாடுகளில் கூட பத்திரமாக நேரத்தில் வீடு போய் சேருங்கள் என கூறி உள்ளார். கூட்டம் கூடுவதை தடுக்க யாராவது சதி செய்தார்களா?. அனைத்து தெரிய வேண்டும்.


Murugesan
செப் 27, 2025 23:38

தன்னை நம்பி பார்க்க வந்த தன்னுடைய ரசிகர்களை ,இந்த துயரமான நிலையி்ல கூட இருந்து கவனிக்க வக்கற்ற அயோக்கியர்,, மண்டையில மூளையற்ற தகுதியற்ற தற்குறிகளை துதிக்கிற கேவலமான மாநிலமாக மாற்றிய திராவிட அயோக்கியனுங்க அழிக்க வேண்டும் தமிழக காவல்துறை திமுகக்ககாரன் காலில விழுந்து மிக கேவலமான நிலையில்


R.MURALIKRISHNAN
செப் 27, 2025 23:33

கேடு கெட்ட அரசியல் நடப்பது தமிழ்நாட்டில் மட்டுமே. இந்த துயரத்தில் விஜய் மட்டுமல்ல, தமிழக அரசும் தவறு செய்திருக்கிறது.


JaiRam
செப் 27, 2025 23:30

சினிமா சாராயம் ரெண்டும் தமிழர்களின் உயிர் நல்ல வருவீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை