உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரந்தூர் செல்ல விஜய்க்கு அனுமதி

பரந்தூர் செல்ல விஜய்க்கு அனுமதி

சென்னை : புதிய விமான நிலைய எதிர்ப்பாளர்களை சந்திக்க, த.வெ.க., தலைவர் விஜய்க்கு, நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் நாளை அவர் பரந்துார் செல்கிறார்.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துார் பகுதியில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக நெல்வாய் நாகப்பட்டு, ஏகனாபுரம், தண்டலம், மகாதேவி மங்கலம் உள்ளிட்ட, 13 கிராமங்களில் இருந்து, 5,133 ஏக்கர் நிலங்களும், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள், நீர்நிலைகள், விளைநிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், தண்டலம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களின் போராட்டம் ஒருபக்கம் நடக்க, மறுபக்கம், நிலம் எடுப்பு உள்ளிட்ட விமான நிலையத்திற்கான அடிப்படை பணிகளை, தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.ஏகனாபுரம் கிராமம் முழுதுமாக கையகப்படுத்தப்பட இருப்பதால், எதிர்ப்பு தெரிவிக்கும் அக்கிராம மக்கள், 900 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ம.க., தலைவர் அன்புமணி, வி.சி., தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர், ஏகனாபுரத்தில் போராடும் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி விழுப்புரத்தில் முதல் மாநாட்டை நடத்தினார். அதில், 'பரந்துார் விமான நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக, விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் நன்றி தெரிவித்தனர். விஜயை சந்திக்கவும் நேரம் கேட்டிருந்தனர்.சமீபத்தில் பெய்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அழைத்த விஜய், நிவாரண பொருட்களை வழங்கினார். அரசியல் கட்சி துவங்கிய பின்னும் களத்திற்கு வரவில்லை என, விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதை வைத்து, தி.மு.க.,வினர் விஜயை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க, விஜய் நாளை பரந்துார் செல்கிறார். இதற்கு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் அனுமதி அளித்துள்ளது.போராட்ட குழுவினரை விஜய் சந்திக்கப் போகும் இடத்தை, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். நாளை பரந்துார் செல்லும் விஜய், ஏகனாபுரம் கிராமம் அருகே, அம்பேத்கர் திடல் பகுதியில் வேனில் இருந்தவாறு பேச அனுமதித்து உள்ளதாகவும், மக்களை அவர் சந்திக்கும் இடமும், நேரமும் விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும், த.வெ.க.,வினர் தெரிவித்து உள்ளனர். விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பின், விஜய், முதல் முறையாக மக்களை சந்திக்க, நாளை களத்திற்கு வருகிறார் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

போலீஸ் விதித்துள்ள கட்டுப்பாடுகள்

அனுமதி அளித்த இடத்தில் மட்டும் தான், மக்களை விஜய் சந்திக்க வேண்டும்அதிக கூட்டம் கூடாமல், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே வர வேண்டும் அனுமதிக்கப்பட்ட வாகனத்தில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் தான் கட்சியினர் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

vinoth vinoth
ஜன 19, 2025 20:15

ஏர்போர்ட் வேணாம் என்று சொல்ல வில்லை ....இந்த இடத்தை தேர்ந்து எடுத்தது தமிழக அரசு தானே தவிர மத்திய அரசு இல்லை ...இருக்கும் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யலாம்


PONGADA LOOSU
ஜன 19, 2025 19:26

What he know ? He may have the ajanda to stop this project ..


panneer selvam
ஜன 19, 2025 18:24

Vijay Ji , Make a heroic announcement , for any new projects no land will be provided in Tamilnadu . All new projects shall be constructed in sky only


தியாகு
ஜன 19, 2025 18:03

இந்த ஜோசெப் விசை கட்சி தொடங்கியதும், கட்சி கொடி அறிவித்ததும் கிருஸ்துவர்கள் கொண்டாடும் புனிதமான நாட்களில். ஆனால் இவர் மத சார்பற்று இருப்பாராம். இவரையும் நம்பி இவர் பின்னால் செல்லும் டுமிழ் சினிமா ரசிக விசிலடிச்சான் குஞ்சு கண்மணிகளை சொல்லணும்.


vbs manian
ஜன 19, 2025 15:47

பரந்தூர் விமான நிலையம் வேண்டும் என்று கழகம் முன்னெடுத்தது. ப ஜெ கா இல்லை. நடுவில் அதானி பூதம் என்று கல்லெறிந்தார்கள். இப்போது ஒப்புக்கொண்டு வேலை ஆயத்தம். அதானி அம்பானி என்று கூவியவர்கள் ஏன் திட்டத்தை நிறுத்தவில்லை.


Shivam
ஜன 19, 2025 15:39

சரி பரந்தூர் வேண்டாம் வேற நல்ல இடமா காட்டுங்கப்பா பேசாம ஏர்போர்ட்ட பனையூர்ல போட்ரலாமா


Svs Yaadum oore
ஜன 19, 2025 14:54

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என்று விடியல் நிதியமைச்சர் அறிவிப்பு ......பரந்தூர் தவிர்த்து வேறு இடத்தில இந்த விமான நிலையம் அமைத்தால் பொருளாதார வளர்ச்சி வராமல் நின்று விடுமா ??....பரந்தூரில் அமைத்தால் மட்டும்தான் விடியுமா ??....மற்ற இடத்தில் அமைத்தால் விடியதா ??....விடியல் திராவிடனுங்க ஜி ஸ்கொயர் சம்பாதிக்கத்தான் இந்த பரந்தூர் திட்டம் .....


panneer selvam
ஜன 19, 2025 18:20

If you do not want airport at Paranthur , please suggest an nate place since Chennai airport is already saturated .


Svs Yaadum oore
ஜன 19, 2025 14:50

இந்த படிக்காத திராவிடனுங்க இந்த பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்துவது பாஜக ஒன்றிய அரசு என்று புரளி கிளப்புவானுங்க .....எந்த திட்டத்திற்கும் நில ஆர்ஜிதம் செய்து கொடுப்பது மாநில அரசு ...மாநில அரசு அனுமதி இல்லாமல் ஒரு அடி நிலம் கூட எந்த திட்டத்திற்கும் வாங்க முடியாது ....விடியல் திராவிடனுங்க ஜி ஸ்கொயர் சம்பாதிக்கத்தான் இந்த பரந்தூர் திட்டம் ..விடியல் கொள்ளயடிக்கத்தான்.....இல்லையென்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என்று ஏன் இன்று விடியல் நிதியமைச்சர் அறிவிக்கனும்?? ....நில ஆர்ஜிதம் செய்வது மத்திய அரசா மாநில அரசா என்று விடியல் நிதி அமைச்சரை கேளு ....


கோபாலன்
ஜன 19, 2025 14:07

பரந்தூருக்கு பதிலாக புதிய க்ரீண்பீல்ட் விமான நிலையத்தை கோவையில் நிறுவுங்கள். சென்னையில் இருந்து பறந்து செல்லும் பயணிகளில் சுமார் முப்பது சதவீதம் கொங்கு, தெற்கு மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருப்பர். தற்போது உள்ள இடம் பெரிய விமானங்களை இயக்க உகந்தது இல்லை.ஓடுபாதை நீளத்தை கூட்டினால் மற்றும் போதாது.அருகில் பல ஆயிரம் வீடுகள் பள்ளிகள் கல்லூரிகள் ஆஸ்பத்திரிகள் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. இதை கணக்கில் கொண்டு ஊருக்கு வெளியே சுமார் முப்பது கிமீ தொலைவில் புதிய விமான நிலையத்தை அமைக்கலாம். அவினாசி சேலம் அல்லது திருச்சி சாலையில் நிறைய காலி நிலம் உள்ளது.ஆகவே பரந்தூருக்கு பதிலாக கோவையில் புதிய விமான நிலையத்தை அமைக்கலாம்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 19, 2025 13:09

தவெக விஜய், தைரியமான ஆம்பளையா இருந்தால், இந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும் பாஜக வைக் கண்டித்து, நாலு வார்த்தையாவது பேசுகிறாரா பார்க்கலாம். இல்லை அங்கேயும் பாயாசம் பற்றி பேசப் போகிறாரா? விமானப் போக்குவரத்து துறை ஒன்றிய பாஜக அரசின் கீழ் தான் இருக்கிறது என்று இவருக்குத் தெரியுமா?


venkat
ஜன 19, 2025 14:38

Central Government implementing the projects in the place recommended by Tamilnadu Government.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை