வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ராம்தாஸ் குரூப்பினர் காலாவதியான ஒன்று. பாட்டாளி மக்கள் கட்சி என்றால் யினி டாக்டர் அன்புமனி தான் .
திண்டிவனம்: பா.ம.க.,வில் அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்த 3 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 4 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி, கட்சியின் தலைமை நிலைய செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவராக இருந்த அன்புமணியை, செயல் தலைவராக அறிவித்ததில் இருந்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ராமதாஸ் நியமித்த நிர்வாகிகளை அன்புமணி நீக்குவதும், அன்புமணி நியமித்த நிர்வாகிகளுக்கு பதில், ராமதாஸ் புதிய நிர்வாகிகளை நியமிப்பதும் தொடர்கிறது.சட்டசபையில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.,வான சேலம் அருளை, சட்டசபை கொறடாவாக ராமதாஸ் நியமித்த நிலையில், இதற்கு போட்டியாக, அன்புமணி தனது ஆதரவாளரான மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமாரை நியமித்தார். இதனால் சட்டசபையில் பா.ம.க., இரண்டாக உடைந்தது. இதன் தொடர்ச்சியாக கட்சியின் நிர்வாகக்குழு பட்டியலில் இருந்து அன்புமணியை, ராமதாஸ் நீக்கினார்.இந்நிலையில், இதுவரை வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தி வந்த ராமதாசுக்கு, செக் வைக்கும் வகையில், விழுப்புரத்தில் நேற்று வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தராத தி.மு.க., அரசை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடந்தது. இது, கட்சி நிறுவனர் ராமதாசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.இந்த சூழலில், அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.,க்களை தற்காலிக நீக்கம் செய்யும் நடவடிக்கையை நேற்று ராமதாஸ் எடுத்துள்ளது, கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, ராமதாஸ் லெட்டர்பேடில் கட்சியின் தலைமை நிலைய செயலர் அன்பழகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:பா.ம.க., நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் அனுமதியோ, உத்தரவோ இல்லாமல், கட்சி சார்பாக எம்.எல்.ஏ.,க்களோ, மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில், தன்னிச்சையாக எந்த ஒரு முடிவடையும் எடுப்பது, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு, ஒழுங்கீன நடவடிக்கை என கருதப்படும்.சமீப காலமாக பா.ம.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் மயிலம் சிவக்குமார், மேட்டூர் சதாசிவம், தர்மபுரி வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாபு ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்து வரும் செயலுக்காக, 4 பேரும் கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகின்றனர்.இந்த 4 பேரும் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை கட்சியினர் அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ராம்தாஸ் குரூப்பினர் காலாவதியான ஒன்று. பாட்டாளி மக்கள் கட்சி என்றால் யினி டாக்டர் அன்புமனி தான் .