உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 வனப்பகுதி மேம்பாட்டுக்கு புதிய மேலாண்மை திட்டம்

3 வனப்பகுதி மேம்பாட்டுக்கு புதிய மேலாண்மை திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீலகிரி, திருப்பூர், விழுப்புரத்தில், சர்வதேச அங்கீகாரம் பெற்ற வனப்பகுதிகளை மேம்படுத்த, ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம் தயாரிக்கும் பணிகளை, வனத் துறை துவக்கி உள்ளது.நீலகிரி மாவட்டம், லாங்வுட் சோலை காடு, பாரம்பரிய சிறப்புமிக்க பகுதியாக உள்ளது. இங்கு, 286 ஏக்கர் பரப்பளவில், பாரம்பரிய சோலை காடுகள் உள்ளன.இப்பகுதியின் சூழலியல் தன்மையை பாதுகாக்க, தமிழக வனத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இதேபோன்று, திருப்பூரில் நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், 308 ஏக்கரில் அமைந்துஉள்ளது. இங்கு பறவை கள் வருகை அதிகரித்து உள்ள நிலையில், இதற்கான மேம்பாட்டு பணிகளுக்கு, வனத் துறை திட்டமிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், கழிவேலி பகுதி, 12,728 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அரிய வகை பறவைகள் வந்து செல்வதால், இப்பகுதி, பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மூன்று பகுதிகளும், சர்வதேச அளவிலான ராம்சார் இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.இதையடுத்து, இப்பகுதிகள் மேம்பாட்டுக்காக, ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.இதற்கான ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளதாக, வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதேபோன்று, நீலகிரி மாவட்டம், முதுமலை தேசிய பூங்கா மற்றும் யானைகள் முகாம் ஆகியவற்றை மேம்படுத்த விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளும் துவங்கி உள்ளதாக, வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
டிச 15, 2024 05:50

முதலில் இந்த பகுதியில் செம்மறி ஆடு , ஆடு வளர்ப்பிற்கு தடை விதியுங்க அரசே , அவைகளுக்காகத்தான் இந்த மரங்கள் மொட்டையாக்கப்பட்டு வாழ்க்கை இழக்கின்றன