உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 30 கிலோ குட்கா, ஆட்டோ பறிமுதல்

30 கிலோ குட்கா, ஆட்டோ பறிமுதல்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே குட்கா பாக்ெகட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் எஸ்.பி.,க்கு வந்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் வி.சாலையில் உள்ள சீனுவாசன்,33: என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அதில் 500 குட்கா பாக்கெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.விசாரணையில், புதுச்சேரி கூனிச்சம்பட்டை சேர்ந்த ஏகநாதன்,53: என்பவர் குட்கா சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். 30 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மற்றும் விற்பனைக்கு எடுத்துச் செல்ல பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர். ஏகநாதனை கைது செய்து காவலில் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை