| ADDED : மார் 17, 2024 10:23 PM
பொள்ளாச்சி :பொள்ளாச்சி அருகே முறையாக ஆவணங்களின்றி பழ வியாபாரியிடம் இருந்து, 30 லட்சம் ரூபாய், நிலையான கண்காணிப்பு குழு பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரம் சோதனை சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு, இன்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த ஈச்சர் சரக்கு வாகனம் நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் வைத்து இருந்த பையில் கட்டு கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது.திருச்சி மாவட்டத்திலிருந்து எலுமிச்சை பழம் கொண்டு வந்து கேரளா மாநிலங்களில் விற்பனை செய்து, அந்த பணத்தை கொண்டு வந்ததாக கணக்காளர் அசோக்குமார், ஓட்டுனர் கரிகாலன் தெரிவித்தனர்.எனினும்முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூபாய் 30 லட்சம் பறிமுதல் செய்த அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யாவிடம் ஒப்படைத்தனர்.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கூறுகையில் , ' 10 லட்சத்துக்கும் அதிகமாக பிடிப்பட்டால் வருமான வரித்துறை ஒப்படைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,'என்றார்