மேலும் செய்திகள்
வணிக வளாகத்தில் வெடித்தது என்ன; உடுமலையில் அதிர்ச்சி
3 hour(s) ago
திமுக அரசு மீது விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்: இபிஎஸ்
9 hour(s) ago | 7
சமஸ்கிருதத்தை இழிவுப்படுத்திய உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ.,
10 hour(s) ago | 3
சென்னை: தமிழகத்தில் குவாரிகள் எதுவும் திறக்கப்படாத நிலையில், 10 மாவட்டங்களில் இருந்து, லாரிகளில் தினமும், 3,000 லோடு ஆற்று மணல் வெளி மாநிலங்களுக்கு செல்வதாக, லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், 13 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் இயங்கி வந்தன. அவற்றின் ஒப்பந்ததாரர்கள் மீதான புகார்கள் தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. இதனால், மணல் குவாரிகள், 2023ல் மூடப்பட்டன. வேறு இடங்களில், புதிதாக மணல் குவாரிகள் திறக்க நீர்வளத்துறை முடிவு செய்தது. தாமதமானது
இதன்படி, 10 மாவட்டங்களில், 30 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது. முதற்கட்டமாக, எட்டு இடங்களில் மணல் குவாரிகள் திறக்க, நீர்வளத் துறை முடிவு செய்தது. ஆனால், மணல் அள்ளிப்போடும் ஒப்பந்ததாரர் தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால், குவாரிகள் திறப்பு தாமதமானது. அத்துடன், மணல் குவாரிகள் திறப்பு மீண்டும் மீண்டும் தாமதமாவதன் பின்னணி குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, நீர்வளத்துறை சார்பில், மணல் குவாரிகள் திறக்கப்படாத நிலையில் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு தினமும், 3,000 லோடு ஆற்று மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, தமிழக மணல், எம்.சாண்ட் லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த நல சம்மேளன தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது: தமிழகத்தில் எட்டு இடங்களில், புதிதாக மணல் குவாரிகள் திறப்பதாக கூறிய நீர்வளத்துறை கண்ணாமூச்சி காட்டி வருகிறது. நீர்வளத்துறையின் செயல்பாடுகள், மணல் கடத்தலுக்கு மறைமுகமாக உதவும் வகையில் அமைந்துள்ளன. கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருநெல்வேலி, வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலுார் ஆகிய மாவட்டங்களில் இருந்து, சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுகிறது. கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு லாரிகளில் தினமும், 3,000 லோடு ஆற்று மணல் கொண்டு செல்லப்படுகிறது. தகவல்கள் மறைப்பு
இதை தடுக்க வேண்டிய போக்குவரத்து துறை, வருவாய் துறை, கனிம வளத்துறை அதிகாரிகள் மவுனமாக உள்ளனர். ஆற்று படுகைகளுக்கு பக்கத்தில் உள்ள பட்டா நிலங்களை சுட்டிக்காட்டி, கலெக்டரிடம் அனுமதி பெறும் நபர்கள், ஆற்று மணலை கடத்துகின்றனர். இதைத்தடுத்து, முறையாக மணல் விற்பனைக்கான குவாரிகளை திறந்தால், மக்களும், மணல் லாரியை நம்பியுள்ள தொழிலாளர்களும் பயன் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மணல் கடத்தல் குறித்து தகவல் வந்தால், அதன் அடிப்படையில் பறக்கும் படை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் ஆதரவு காரணமாக, இதுகுறித்த தகவல்கள் மறைக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago
9 hour(s) ago | 7
10 hour(s) ago | 3