உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்கள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்கள்

சென்னை:தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தற்போதுள்ள நிலவரப்படி, அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு, 100 ரயில் சேவைகளை இயக்க முடியும். அதனால் திருநெல்வேலி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு, 34 சிறப்பு ரயில்களை இயக்க, ஐ.ஆர்.சி.டி.சி., திட்டமிட்டுள்ளது. குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள், வரும் 29ம் தேதி முதல் பிப்., 29ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இது குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி