உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "பாரதம் அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமி": கவர்னர் ரவி பேச்சு

"பாரதம் அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமி": கவர்னர் ரவி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: '' பாரதம் என்பது சாதாரணமானது ஒன்றும் அல்ல. உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமியாகவும், முன் உதாரணமாகவும் திகழ்ந்து வருகிறது'' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.திருச்சி, திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லுாரியின் 25வது ஆண்டு விழாவில், ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீவராக மகதேசிக சுவாமிகள், தமிழக கவர்னர் ரவி ஆகியோர் பங்கேற்று, வெள்ளி விழா மலரை வெளியிட்டனர்.விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பத்து ஆண்டுகளுக்கு முன், இந்தியா மக்கள் தொகை நிறைந்த நாடாக மட்டுமே இருந்தது. தற்போது, அந்த நிலை முற்றிலும் மாறி இருக்கிறது. உலகளாவிய பிரச்னைகளுக்கு, நம் நாடு தீர்வை கொடுக்குமா? என்று பல நாடுகள் எதிர்பார்க்கும் சூழல் உருவாகி உள்ளது.

பாரதம்

இயற்கை பேரிடர்கள், கொரோனோ பரவல் மற்றும் பல நாடுகளுக்கு இடையே போர் போன்ற நெருக்கடியான நிலைகளை பார்க்க முடிகிறது. பொருளாதார ரீதியாக உயர்வாக உள்ள நாட்டையும், ஏழ்மையான சூழல் உள்ள நாட்டையும் பார்க்க முடிகிறது. அதே போல், ராணுவப்படை பலம் அதிகம் உள்ள நாட்டையும், படை பலம் குறைவாக உள்ள நாட்டையும் பார்க்கிறோம்.

தெய்வ குடும்பம்

ஆனால், கண்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து நம் நாட்டில், ஜி 20 மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டி இருக்கிறோம். பாரதம் என்பது சாதாரணமானது ஒன்றும் அல்ல. உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமியாகவும், முன் உதாரணமாகவும் திகழ்ந்து வருகிறது. அதனால், தெய்வ குடும்பம் என்று போற்றப்படுகிறது. 2030க்குள் 50 சதவீத இயற்கை எரிசக்தியை பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய சொத்து

முன்னதாக, தேசிய கல்லூரியில் நடந்த விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது: விளையாட்டு வீரர்கள் தேசிய சொத்து. அவர்களுக்கான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். விளையாட்டு, தேசத்தின் பெருமைக்கு மட்டுமின்றி தேசத்தின் நலனுக்கும் முக்கியமானது. விளையாட்டில் போட்டியிடுபவர்கள், சமூகத்திற்கும் பங்களிப்பாக இருக்கின்றனர். எனவே, விளையாட்டை தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

A1Suresh
பிப் 10, 2024 21:59

முன்பு நாம் வாழும் பூமியானது ஒரே நிலப்பகுதியாக இருந்தது. அதனை ஸ்வாயம்புவா மனுவின் மகனான உத்தானபாத மஹாராஜர் ஏழு பிரிவுகளாக பிரித்தார். அதில் இன்று நாம் வாழ்வது நாவலந்தீவு என்னும் ஜம்புத்வீபம். இதையே மாண்புமிகு கவர்னர் விவரிக்கிறார்.


A1Suresh
பிப் 10, 2024 21:57

ஸ்ரீமத் பாகவத மஹாபுராணம், ஸ்ரீவிஷ்ணுபுராணம் ஆகிய புராணங்களில் சொல்லப்பட்டதை மாண்புமிகு கவர்னர் ஐயா வழிமொழிந்திருக்கிறார்..


T.sthivinayagam
பிப் 10, 2024 21:45

அடிச்சிவுடுங்க சார் இன்னும் இரண்டு மாதம் தானே


g.s,rajan
பிப் 10, 2024 21:33

நம் நாட்டில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு யதார்த்தமே எதுவும் தெரியல


அப்புசாமி
பிப் 10, 2024 20:26

இதை அடுத்த வங்க சொல்லணும். நமக்கு நாமே மெடல்.குத்திக்கிட்டா?


john
பிப் 10, 2024 20:23

ஒண்ணுமே புரியல பிரதமர் சொல்லுகிறார் 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாகி விடும் என்று கவர்னர் பாரதம் அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமியாக விளங்கும் என்கிறார் இப்ப இருக்கிற நிலைமை பார்த்து அப்படி ஒன்னும் தெரியல ஒருவேளை 25 ஆண்டுகளில் வளர்ந்த நாட்டுக்கு இந்தியாவை விற்றாலும் விற்று விடுவீர்கள் ஏதோ சூசகமா சொல்லுறீங்க


முருகன்
பிப் 10, 2024 18:15

தேசப்பற்று அனைவருக்கும் இருக்கிறது ஏதோ இந்தியா தான் உலகத்திற்கு முன்னோடியாக இருப்பது போல் பேசுவதை நிஜத்தில் செய்தால் நன்றாக இருக்கும்


Indian
பிப் 10, 2024 18:08

தந்தை யாரோ ??


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 10, 2024 17:19

நாட்டை இழிவுபடுத்துவதில் ஒரு சந்தர்ப்பத்தைக் கூட வீணாக்க விரும்பாத தேசவிரோதிகள், திராவிட மாடல் கொத்தடிமைகள் ஆகியோருக்கு ஒரே நேரத்தில் பதிலடி கொடுக்க உங்களாத்தான் முடியும் .....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை