உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டையே காணோமாம்": போலீசில் புகார்

"தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டையே காணோமாம்": போலீசில் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் அடையாள அட்டையை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாகு பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் தலைமைச் செயலகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. இவருக்கான அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அடையாள அட்டையை புதுப்பிப்பதற்காக அதனை டில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப முடிவு செய்தார். அதற்காக அடையாள அட்டையை தனது உதவியாளர் சரவணன் என்பவர் மூலம் தபால் மூலம் அனுப்புவதற்காக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.அதன்படி, உதவியாளர் அடையாள அட்டையை தபால் நிலையம் எடுத்து சென்ற போது அங்கே தவறிவிட்டதாக தெரிகிறது. இதனால் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் அடையாள அட்டையை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியின் தேர்தல் அடையாள அட்டையே காணாமல் போனதால், போலீசார் விறுவிறுப்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

R.RAMACHANDRAN
பிப் 01, 2024 09:42

சட்டப்படி செயல்பட மறுத்த இந்த நபர் அரசு வேலைக்கே தகுதியில்லாதவர். நாட்டில் தலையெழுத்தால் பணியில் இருந்து கொண்டு நான்கு லட்சம் மாத சம்பளம் பெறுகிறார். அதாவது இவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது தொழில் தகராறுகள் சட்டம் 1947 பிரிவு 33சி ன் கீழான அதிகாரத்தைப் பயன்படுத்தி தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின்படி தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய தொகையை வசூலித்து தருமாறு அரசு ஆணை பிறப்பித்தும் அரசாங்கம் முப்பத்தைந்தாயிரம் ரேஷன் கடை விற்பனையாளர்களை கொத்தடிமையாக நடத்துவது சம்பந்தமானது என்பதால் வசூல் பணியை செய்யத்தவறினார்.


D.Ambujavalli
பிப் 01, 2024 06:28

எவ்வளவு பொறுப்பான உதவியாளர் இவ்வாறு தொலைந்தால் எவ்வளவு பிரசினை வரும் என்பதுகூடத் தெரியாதா ?


Indhuindian
ஜன 31, 2024 18:14

இதெல்லாம் ஜுஜுபி ஒரு முதன் மந்திரியே ரெண்டு நாளா காணோம்ன்னு தேடிகிட்டுஇருந்தாங்க டெல்லியிலே இறங்கி காணாமப்போன அவரு எப்படியோ ராஞ்சிக்கிட்டு போயிட்டாரு அது வரைக்கும் எங்கே இருந்தார் என்ன செஞ்சாருன்னு யாருக்கும் தெரியாது


Venkatesh Sagadevan
ஜன 31, 2024 16:22

திராவிட மாடல் ஆட்சிக்கு இதுவே சாட்சி..


Krishnamurthy Venkatesan
ஜன 31, 2024 14:59

புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டபின் பழைய அடையாள அட்டையை ஒரு GEZETTED OFFICER முன்னிலையி எரித்து, அவ்வாறு எரித்ததாக அவர் ஒரு CERTIFICATE கொடுப்பார். அதனை ISSUING AUTHORITY க்கு அனுப்பினால் போதும்.


Barathan
ஜன 31, 2024 16:03

அதான் பழைய அடையாள அட்டையை காணாமாமே பின்ன எங்க போயி ..."பழைய அடையாள அட்டையை ஒரு GEZETTED OFFICER முன்னிலையில் இப்படி ..."


sridhar
ஜன 31, 2024 13:37

திமுகவுக்கு ஒரு வோட்டு நஷ்டம்.


Kundalakesi
ஜன 31, 2024 13:29

Adada. Digital ugathil post la etharku


Nalla
ஜன 31, 2024 13:27

பாவம், தேர்தல் கமிஷனர் வரும் தேர்தலில் ஒட்டு போட முடியாது


Nandakumar Naidu
ஜன 31, 2024 13:20

0.........


கிருஷ்ணதாஸ்
ஜன 31, 2024 13:16

இது வாக்காளர் அடையாள அட்டையாக இருக்காது என்று எண்ணுகிறேன். பணியாளர் அடையாள அட்டையாக இருக்கலாம். இதையெல்லாம் திருடி யாரும் ஏதும் பலனடைய முடியாது!


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை