உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவர் ஒரு பிரபலம் என்று தெரியாது: நடிகர் சயீப் அலிகான் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் பேட்டி!

அவர் ஒரு பிரபலம் என்று தெரியாது: நடிகர் சயீப் அலிகான் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் பேட்டி!

மும்பை: நடிகர் சயீப் அலிகான் காயம் அடைந்ததும், விரைவாக லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்த ஆட்டோ டிரைவர் பஜன் சிங், 'எனக்கு அவர் பிரபலம் என்று தெரியாது. நான் வாடகை வாங்க வில்லை. அவருக்கு உதவியதில் நான் திருப்தி அடைந்தேன்' என தெரிவித்தார்.பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், 54, மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அங்குள்ள, 12வது மாடியில், நான்கு தளங்களுடன் இவரது வீடு உள்ளது. மனைவியும், நடிகையுமான கரீனா கபூர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்குள் இரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர், சயீப் அலிகானை ஆறு முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். அறுவை சிகிச்சைக்கு பின், முதுகில் சிக்கியிருந்த கத்தியின் பாகம் வெளியே எடுக்கப்பட்டது. நடிகர் சயீப் அலிகானை லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்த ஆட்டோ டிரைவர் பஜன் சிங், கூறியதாவது: நான் வழக்கமாக இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுவேன். அன்று இரவு குறிப்பிட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்றபோது, ரோட்டில் நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவர், எனது ஆட்டோவை கைகாட்டி நிறுத்தினார். அவர்கள் அனைவரும் பெரும் பீதியுடன் இருந்ததை காண முடிந்தது. அவர்களில் காயம் பட்டிருந்தவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டபடி, உள்ளே அமர்ந்து கொண்டார். மற்ற இருவரும் அருகில் அமர்ந்து கொண்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு போக வேண்டும் என்றனர். அப்போது எனது ஒரே எண்ணம் குறுக்கு வழியில் அழைத்து சென்று, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என நினைத்தேன். விரைவாக அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தேன். பயணத்தின் போது காயம் பட்டவர் சுயநினைவுடன் இருந்தார். தெளிவாக பேசினார். மருத்துவமனை செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று திரும்பத் திரும்பக் கேட்டார். இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று நான் அவரிடம் சொன்னேன். அவரது வெள்ளை ஆடை ரத்தத்தில் நனைந்திருப்பதை நான் கவனித்தேன். பிறகு தான் எனக்கு அவர் பிரபல பாலிவுட் நடிகர் என்பது தெரியவந்தது. நான் அவர்களிடம் வாடகை கூட கேட்கவில்லை.இவ்வளவு பெரிய நடிகர் என் வாகனத்தில் வந்ததும், நான் அவர்களுக்கு உதவியதும், எனக்கு பெரிய திருப்தியாக இருந்தது. மருத்துவமனையை அடைந்ததும், ஊழியர்கள் உடனடியாக அவரைக் கவனித்து ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Senthoora
ஜன 18, 2025 17:21

இபோவாது புரிந்த்துதா யாரு ரியல் ஹீரோ . ஆட்டோ ட்ரைவர்தான். சாகிப் அலிகான் போன்றவர்கள் , சினிமாவில் தான் எதிரிகளை அடித்து நொறுக்குவார்கள். ரியல் லஐபில் பயந்தான்கொள்ளிகள்.


RAMAKRISHNAN NATESAN
ஜன 18, 2025 17:13

மகனுக்கு தைமூர் ன்னு பேரு வெச்சவன் ..... குத்துனவனுக்கும் பேரு வைக்கச்சொல்லுங்க பார்ப்போம் ....


N Annamalai
ஜன 18, 2025 13:33

இதில் நிறைய கேள்விகள் வருகிறது .காவலுக்கு ஆள் இல்லையா ?.ஒரு கார் டிரைவர் இல்லையா ?.அந்த அடுக்குமாடியில் யாரிடமும் கார் இல்லையா ?.அதில் கார் ஓட்ட தெரிந்தவர் யாரும் இல்லியா .முதல் உதவி பெட்டி யாரிடமும் இல்லையா ?.ஏன் 108 எண்ணுக்கு அழைக்கவில்லை ?.


அன்பே சிவம்
ஜன 18, 2025 12:36

1). வறுமையிலும் செம்மை. 2). சில குணங்கள் பிறப்பு, வளர்ப்பு அடிப்படையில் அமைந்தது விடுகிறது. 3). அந்த வகையில் ஆட்டோ டிரைவர் பஜன் சிங் அவர்களின் தாய் தந்தை போற்றுதலுக்கு உரியவர்கள். 4). பொதுவாக இரவில் பணியில் இருப்பவர்கள் குறிப்பாக body guards கண்டிப்பாக டிரைவிங் தெரிந்த நபராக தான் இருக்க முடியும், ஏதோ internal பிராப்ளம் போல் தெரிகின்றது. 5). கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதான் ஆகும். wait பண்ணிலால் தெரிந்துவிடும்.


Oru Indiyan
ஜன 18, 2025 11:56

நான் ஆட்டோ காரன்.. ஆட்டோ காரன்.


R. SUKUMAR CHEZHIAN
ஜன 18, 2025 11:43

தன் உயிரை காப்பாற்றிய அந்த ஆட்டோ டிரைவர் திரு. பஜன் சிங் அவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும் நடிகர் சாயிப் அலிகான், இது தான் நன்றி கடன்.


sankaranarayanan
ஜன 18, 2025 11:16

இவருக்கு மத்திய அரசே வரும் குடியரசு தின விழாவில் தகுந்த சன்மானம் பரிசு கொடுத்து மக்களை மகிழ்விக்க வேண்டும் இப்படிப்பட்ட நபர்கள் நமது நாட்டிற்கு தக்க தருணத்தில் உதவிசெய்ய அவசியம் வேண்டும் என்பதை சொல்லாமலேயே இவர் நிரூபித்து காட்டிவிட்டார் இவர் நீடுழி வாழ்க வாழக வாழ்க


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 18, 2025 11:10

அது சரி....ராஜ் வம்சத்து வாரிசு வீட்டில் ஒரு காரும் இல்லையா?? கார் ஓட்ட தெரிந்த நபர்கள் யாரும் அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இல்லையா ???சரியான நேரத்தில் ஆட்டோ டிரைவர் வந்ததால் சயிப்அலி பிழைத்தார்....!!!


என்றும் இந்தியன்
ஜன 18, 2025 11:05

மருத்துவ செலவு ரூ 36 லட்சம் FREE ஆட்டோ சவாரி. ஆட்டோ டிரைவர் பாராட்டுக்குரியவர்


KRISHNAN R
ஜன 18, 2025 10:49

உயரிய மனிதர்கள்....இன்னும்... இவரை போல சாதாரண நிலையில்...இருக்கிறார்கள். இவர் ஒரு சிறந்த உதாரணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை