மேலும் செய்திகள்
படகு ஆம்புலன்ஸ் சேவை: அரசு அனுமதிக்கு காத்திருப்பு
6 minutes ago
பத்திரப்பதிவில் ஒரே நாளில் ரூ.303 கோடி வசூல்
14 minutes ago
சென்னை: போதைப்பொருள் தடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவில், புதிதாக துவக்கப்பட்டுள்ள மோப்ப நாய் பிரிவுக்கு, 35 நாய்கள் வாங்கப்பட்டுள்ளன. காவல் துறையின் மோப்ப நாய் படையில், 172 நாய்கள் உள்ளன. அவற்றில், குற்றவாளிகளை அடையாளம் காண 74 நாய்களுக்கும், வெடிகுண்டு மற்றும் போதை பொருட்களை கண்டறிய, 92 நாய்களுக்கும், தாக்குதல் நடத்த ஆறு நாய்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், போதைப்பொருள் தடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவுக்கு, புதிதாக மோப்ப நாய் படை உருவாக்கப்பட்டு உள்ளது. இ ப்படைக்கு புதிதாக, 35 மோப்ப நாய்கள் வாங்கப்பட் டு உள்ளன. இந்நாய்களுக்கு, போதைப்பொருளை கண்டறிய பயிற்சி அளிக்கப்படும். அதன்பின். திருச்சி, மதுரை, கோவை நகரங்களுக்கு அனுப்பப்படும் என, போலீஸ் அதி காரிகள் தெரிவித்தனர்.
6 minutes ago
14 minutes ago