வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பழைய ஆட்களை நிறுத்தி விட்டு புதிய ஆட்களை நியமித்தால் 10 ரூ வாங்குவது தவிர்க்கபடலாம்
இந்த நிறுவனம் எப்ப மூடுவங்கன்னு தெரியல இதில் பணி நிரந்தரமா?
மூடுவதற்கு வாய்ப்பே இல்லை தலைவா.
சென்னை: ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட, டாஸ்மாக் ஊழியர்கள் 350 பேரைப் போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று கோரிக்கை வெல்லும் போராட்டம் நடந்தது. சென்னை உயர் நீதிமன்றம் அருகே, கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட, 350 பேரைப் போலீசார் கைது செய்தனர். அதேபோல், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள், ஆங்காங்கே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.போராட்டம் குறித்து, சங்கத்தின் சிறப்பு தலைவர் பாரதி கூறியதாவது:மாநிலம் முழுதும் உள்ள, 6,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் வி-ற்பனை நிலையங்களில், 24,000க்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய முறையான ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட எந்த வசதிகளையும் செய்து தராமல், அரசு அலட்சியம் காட்டி வருவது வேதனையாக உள்ளது. தேர்தலின்போது, 10 ஆண்டுகளுக்கு மேல், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும், தற்காலிகப் பணியாளர்களுக்கு, பணி நிரந்தரம் வழங்கப்படும் என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை. இதை அரசுக்கு நினைவூட்டும் வகையில், அறவழி போராட்டம் நடத்த திட்டமிட்டோம். ஆனால், அரசு போராட்டத்திற்கு அனுமதி மறுத்து, காவல் துறையினரை வைத்து அடக்குவது, கடும் கண்டனத்துக்கு உரியது. ஊழியர்களின் பணி நிரந்தம் உள்ளிட்ட கோரிக்கையை, அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.
பழைய ஆட்களை நிறுத்தி விட்டு புதிய ஆட்களை நியமித்தால் 10 ரூ வாங்குவது தவிர்க்கபடலாம்
இந்த நிறுவனம் எப்ப மூடுவங்கன்னு தெரியல இதில் பணி நிரந்தரமா?
மூடுவதற்கு வாய்ப்பே இல்லை தலைவா.