உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

சென்னை:தாம்பரம் - செங்கோட்டை உட்பட நான்கு விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:ரயில்வே வாரியத்தின் ஒப்புதலை தொடர்ந்து, நான்கு விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்படுகிறது.l கர்நாடகா மாநிலம் கே.எஸ்.ஆர்., பெங்களூரு - கோவை உதய் விரைவு ரயில், இன்று முதல் இரு மார்க்கத்திலும் திருப்பத்துாரில் ஒரு நிமிடம் நின்று செல்லும்l தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் இன்று முதல் இரு மார்க்கத்திலும், கல்லிடைக்குறிச்சியில் ஒரு நிமிடம் நின்று செல்லும்l எழும்பூர் - கொல்லம் விரைவு ரயில், இன்று முதல் இரு மாக்கத்திலும், தென்மலையில் ஒரு நிமிடம் நின்று செல்லும்l திருநெல்வேலி - குஜராத் மாநிலம் காந்திதாம் விரைவு ரயில் நாளை முதல் இரு மார்க்கத்திலும், ஆலப்புழாவில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ