உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை திருமங்கலம் பகுதியில் டாக்டர் பாலமுருகன்,52, அவரது மனைவி சுமதி 47, மகன்கள் ஜெஷ்வந்த்குமார்,19, லிங்கேஸ்வரன்,17, ஆகிய 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p5mlpe05&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சம்பவ இடத்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. டாக்டர் பாலமுருகன் ரூ.5 கோடி மேல் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Gopalan Iyer
மார் 14, 2025 07:14

you are correct . In my town also you can see these people doing kandhu vatti business


KRISHNAN R
மார் 13, 2025 20:19

சமூகத்திற்காக... வாழும் வாழ்க்கை உளவியல் ரீதியில் கெடுத்து விடும். நகரம் கிராமம் எல்லாம் மாறிவிட்டது. ஆன்லைன் மூலம் விளம்பரம் மிக மிக கொடுமை. இதற்கு யாரும் கடிவாளம் போடவில்லை. செய்திகளில் எதற்கு... ஆன்லைன் விளையாட்டு,கடன்... இன்ன பிற விளம்பரம்?


Mr Krish Tamilnadu
மார் 13, 2025 12:54

பரமார்த்த குரு கழுதை கதை போல், அன்றிலிருந்தே சமூகம் நமது வாழ்க்கையை தீர்மானிக்க ஆரம்பித்து விட்டது. இன்று அந்நிய நாடுகள் நமது வாழ்க்கை நடவடிக்கைகளை தீர்மானிக்கும் அளவுக்கு சென்று விட்டது. புரியவில்லையா?. செல்போன் நிறுவனம் நமது மாத சம்பளத்தில் 1/- என ஆசை காட்டி, 300/- இன்று வாங்கி விடுகிறது. ஜி பே வரவு செலவு வைத்து, அந்த லோன் இந்த லோன் என நமது உழைப்பை வட்டியில் விரயமாக்க வலை விரிக்கின்றன. இன்று வியாபாரம் படுக்க ஆரம்பித்து விட்டது, யூ டியூப் நடுவே விளம்பரம் செய்தால் மட்டுமே மக்கள் பார்வையில் பட முடியும். நமது விளம்பர முறை?. விளம்பர வருமானம் இனி யூ டியூப்க்கு. எல்லாம் ப்ரி நெட் விளைவு?. நமது தேவையை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.


raghavan
மார் 13, 2025 12:42

வாங்கியது பத்து லட்சம் என்றால் கந்து வட்டி 4 கோடியே 90 லட்சமாக ஆகியிருக்கும். கடன் கொடுத்தவன் திமுக புள்ளியாக இருக்கலாம். பாவம் அநியாய மாக ஒரு குடும்பமே போச்சு.


sridhar
மார் 13, 2025 12:41

ஒரு சாதாரண வாழ்க்கைக்கு ஐந்து கோடிக்கு மேல் கடன் தேவைப்படுமா


Nellai tamilan
மார் 13, 2025 12:06

வரவுக்கு தகுந்த செலவு என்பது இப்பொழுது சுத்தமாக இல்லை. இதில் படித்தவர் படிக்காதவர் என்று எந்த வித்தியாசமும் இல்லை. யதார்த்தமான வாழ்க்கை வாழ யாரும் தயாராக இல்லை. இதை பற்றி யாராவது சொன்னாலும் பைத்தியம் என்று நினைக்கிறார்கள். தனிமனித ஒழுக்கம்/ நேர்மை / சிக்கணம் / சேமிப்பு போன்ற வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் எதுவும் இன்றைய கல்வி முறையில் இல்லை.


अप्पावी
மார் 13, 2025 11:08

பொதுத்துறை, தனியார் அல்லது கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியிருந்தால் சேஃப். கட்டலேன்னாலும் வாராக்கடன் வங்கியில் தள்ளியிருப்பார்கள். கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கியிருந்தால் சங்குதான்.


ராஜ்
மார் 13, 2025 10:22

ஒருபுறம் மக்கள் கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் மறுபுறம் அரசியல்வாதிகள் கோடிகளில் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து பணத்தில் புரள்கிறார்கள்.


Subburamu Krishnasamy
மார் 13, 2025 09:47

Greedy for money and materialistic comforts destroyed the family. He is a well qualified doctor in education, but in his family management, he is an illiterate. Sorry for the youths


Ram
மார் 13, 2025 11:12

சரியாக சொன்னீர்கள், மக்களின் அதீத ஆசை விபரீதத்தில் சென்று முடிகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை