மேலும் செய்திகள்
கரூரில் உயிரிழந்தோருக்கு த.வெ.க., நிர்வாகி உதவி
15-Oct-2025
கரூர்: கரூரில் த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, அக்கட்சி சார்பில் நிவாரண நிதியாக, அவரவர் வங்கி கணக்குகளில், 20 லட்ச ரூபாய் நேற்று செலுத்தப்பட்டது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்., 27ல் த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில், 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, 20 லட்ச ரூபாய் வழங்கப்படும் என, த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்தார். ஆனால், அக்கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை மற்றும் கரூரில் போலீசார் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், 41 பேர் குடும்பத்தினரின் வங்கி கணக்கில், 20 லட்ச ரூபாய் நேற்று மாலை செலுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வங்கிகளில் இருந்து, இதற்கான மெசேஜும், உயிரிழந்த குடும்பத்தினரின் மொபைல் எண்ணுக்கு சென்றது.
15-Oct-2025