மேலும் செய்திகள்
வெள்ளகோவில் அருகேநாய் கடித்து 7 ஆடு பலி
19-Feb-2025
வெறிநாய் கடித்து 2 ஆடுகள் பலி
09-Feb-2025
ராமநத்தம்; ராமநத்தம் அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 49 ஆட்டுக் குட்டிகள் தீயில் கருகி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம், கோட்டையூரை சேர்ந்தவர் குமார், 45. இவர், ஆண்டுதோறும் தனது ஆடுகளை வட மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி வந்து கிடை அமைத்து வருவாய் ஈட்டுவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாக, கடலுார் மாவட்டம் ராமநத்தம் அடுத்த வாகையூரில் கிடை அமைத்து ஆடுகளை பராமரித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் ஆட்டுக்குட்டிகளை பட்டியில் அடைத்து விட்டு, 500 ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் கிடை அமைத்த இடத்திற்கு வந்து பார்த்த போது, பட்டியில் அடைத்து வைத்திருந்த 49 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி இறந்து கிடந்தன. இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கிடை கட்டுவது தொடர்பாக விரோதத்தில் ஆட்டுக்குட்டிகளுக்கு தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19-Feb-2025
09-Feb-2025