உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை!

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை!

சென்னை: பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். பாலியல் வன்கொடுமை வழக்கில், 14 ஆண்டுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்கும் வகையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.சட்டதிருத்த மசோதாவின் அம்சங்கள் என்னென்ன?https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=90posqto&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை* பாலியல் வன்கொடுமை வழக்கில், 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டணை.* மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை* பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை; ஜாமினில் வெளியே வர முடியாது.* குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை* நெருங்கிய உறவினரால், அதிகாரம் மிக்கவரால் பலாத்கார வழக்குகளில் ஆயுளுக்கும் சிறை.* கூட்டு பலாத்காரம், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தல் போன்றவற்றுக்கும் ஆயுள் சிறை தண்டனைமுதல்வர் தாக்கல் செய்த இந்த மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

கடும் நடவடிக்கை

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது. இத்தகைய சூழலில் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக, தமிழகம் திகழ்ந்து வருகிறது. பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லும் மாநிலமாக, பெண்கள் அதிகமான சமூகப் பங்களிப்பு வழங்கும் மாநிலமாக தமிழகம் வளர்ந்து வருகிறது. அதேநேரத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கித் தருவதிலும் உறுதியோடு செயல்பட்டு வருகிறது தமிழக அரசு.

இரும்புக்கரம்

அரசின் இந்த நடவடிக்கைகளைப் பற்றி இந்த மாமன்றத்தில் நான் பலமுறை எடுத்துரைத்துள்ளேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி வருகிறது இந்த அரசு. 86 விழுக்காட்டிற்கு மேலான வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த அரசில்தான். பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு பற்றி 2 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியுள்ளதும் இந்த அரசுதான்.

தூக்குத் தண்டனை

சத்யா என்ற பெண் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்திருப்பதும் இந்த அரசுதான். அனைத்துப் பெண்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் மன்னிக்க முடியாத குற்றம். இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபட முனைவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

vijay
ஜன 16, 2025 17:02

உங்க கட்சிக்காரங்க பெண் போலீஸ் கிட்டயே சில்மிஷம் பண்ணுனாங்க. அதுக்கு என்ன தண்டனை திராவிட முதல்வரே?


Padmasridharan
ஜன 11, 2025 17:47

ஒரு மருத்துவமனையில் doctor-nurse கட்டிபிடித்தவருக்கு.. காவல் துறையில் police-complainant க்கு mobile phoneல் அசிங்கமா chat செய்தவருக்கு என்ன தண்டனை இதில் இல்லையே ?


S.V.Srinivasan
ஜன 11, 2025 13:31

அண்ணா பல்கலைக்கழக விஷயத்தில் காவல்துறையே பாதிக்க பட்ட பெண்ணின் விவரங்களை கொடுத்திருக்கிறார்களே. அவர்களுக்கு என்ன தண்டனை முக்யமந்திரி அவர்களே.


S.V.Srinivasan
ஜன 11, 2025 13:27

ஆண்களே வெளியில் நடக்கும்போது பார்த்து செல்லுங்கள். பாட்டி பின்னால் சென்றாலும் உள்ள தள்ளிடுவாய்ங்க.


S.V.Srinivasan
ஜன 11, 2025 13:24

அண்ணா பல்கலைகழக மாணவி விஷயத்தில் இரும்புக்கரத்தை எந்த கடையில் பேரீச்சம்பழத்திற்கு போட்டீர்கள் முக்யமந்திரி அவர்களே. ஞானசேகரன் தீம்க உறுப்பினர் இல்லை தீம்க அனுதாபி என்று சப்பைக்கட்டு கட்டுகுறீர்களே தவிர நடவடிக்கை ஒன்றும் இல்லையே . ஏன் ?


h
ஜன 11, 2025 15:53

correct


Sivak
ஜன 10, 2025 22:07

ஆண்களுக்கு ஆப்பு வைக்கப்படும்.. பொய் புகார்களால் .... விஷயம் தெரியாமல் ஜால்ரா அடிக்கும் கொத்தடிமைகள் புரிந்து கொள்ளவும் ....


திண்டுக்கல் சரவணன்
ஜன 10, 2025 20:59

/பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை ஜாமினில் வெளியே வர முடியாது./ இது போன்ற யோசனையற்ற சட்டங்கள் ஆண்களை மிகவும் பாதிக்கும். பொய்யான வரதட்சிணை கேசில் அல்லல் படும் ஆண்கள், இதுபோன்ற சட்டங்களால் மேலும் பாதிக்கப்படுவார்கள். தவறு செய்யும் ஆண்கள், எப்படியும் தப்பித்து விடுவார்கள். அப்பாவிகள் மீது பொய் கேஸ் விழும்.


நிக்கோல்தாம்சன்
ஜன 10, 2025 20:51

அதேபோல இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பெண்களுக்கு மற்றும் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை என்றும் சொல்லிடுங்க


sankaranarayanan
ஜன 10, 2025 20:41

இதெல்லாம் சரிங்க பெண்களின் மேலாடையை அசெம்பளியிலேயே உறுவுனவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படும் இப்போது அதை நிறைவேற்றுவீர்களா? உங்களால் முடிந்தால் அதை முதலில் நிறை வேற்றுங்கள் பிறகுதான் மக்களுக்கு நம்பிக்கை வரும் .அதை கண்டுகொள்ளவே மாட்டீங்களே


Raj S
ஜன 10, 2025 18:52

ஒரு பொண்ணு பின்னாடி போய், மக்களோட பணத்துல அவளுக்காக கார் ரேஸ் நடத்துறவங்கள என்ன பண்ணலாம் செயல்படாத முதல்வரே?


சமீபத்திய செய்தி