லோக்சபா தேர்தல் வருவதற்குள் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்களை, அயோத்திக்கு அழைத்துச் சென்று, ராமர் கோவிலில் தரிசனம் செய்ய வைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் பா.ஜ., இறங்கியுள்ளது.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், வரும் 22ல் பிரமாண்ட ஏற்பாடுகளுடன், ராமர் கோவில் திறப்புவிழா நடைபெறஉள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5hoppq2p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்குரிய அனைத்து வேலைகளும் துரித கதியில் நடந்து வரும் நிலையில், இந்த திறப்பு விழாவை, லோக்சபா தேர்தலுக்கு எவ்வாறெல்லாம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற யோசனைகள் பா.ஜ.,வுக்குள் தீவிரம் பெற்று வருகின்றன.இதற்காகவே, புதுடில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவல கத்தில், 150 பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில், பா.ஜ., தலைவர் நட்டா பங்கேற்றார்.அதில், ராமர் கோவில் திறப்பு விழாவை வைத்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் ஆலோசிக்கப்பட்டன.திறப்பு விழாவுக்கு முந்தைய ஏற்பாடுகளை, அரசு மற்றும் ராமர் கோவில் டிரஸ்ட் ஆகிய தரப்புகள் கவனித்துக் கொண்டாலும், அதற்கு பின் தான், மிக முக்கிய கால கட்டமே வரப்போகிறது.அந்த காலகட்டத்தை எவ்வளவு துாரம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென திட்டமிடுதல் அவசியம் என்றும் தலைவர்கள் வலியுறுத்தினர். இதன்படி, இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களை அயோத்திக்கு அழைத்துச் செல்லும் பணியில் இறங்க வேண்டும்.அயோத்தி செல்ல வேண்டுமென்று ஆசைருந்தும், வசதியின்றி தவிப்பவர்களாக இருந்தால், அவர்களை கட்டாயம் பயணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஜாதி ரீதியாக எந்தவித பாகுபாடும் பார்க்காமல் ராமரை தரிசிக்க அழைத்து வர வேண்டும்.வரும் 25 முதல் மார்ச் 25 வரையில், இதற்கென்றே பிரசார இயக்கம் நடத்தி, அதன் வாயிலாக ஒவ்வொரு நாளும் 50,000 பேரை, அயோத்திக்கு அழைத்துவந்து தரிசனம் செய்ய வைக்க வேண்டும்.பயணச் செலவை வரக்கூடிய பக்தர்களே ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், தங்குமிடம் உள்ளிட்ட மற்ற ஏற்பாடுகள் அனைத்தையும் பா.ஜ.,வே ஏற்றுக் கொள்ளும்.நாடு முழுதும், 430 நகரங்களில் இருந்து, அந்த நாட்களில் மட்டும் அயோத்திக்கு, 35 ரயில்கள், பிரத்யேகமாக இயக்கப்படும். லோக்சபா தேர்தலுக்குள் எப்படியும் நாடு முழுதும் இருந்து 50 லட்சம் பேரையாவது தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.மாநில அளவிலும், லோக்சபா தொகுதி அளவிலும், சட்டசபை தொகுதி அளவிலும், ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பேற்று செயல்படுவர். அதேநேரம், இந்த விவகாரத்தில் எந்த இடத்திலும் பா.ஜ., கொடியை பயன்படுத்த வேண்டாம் என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து ராம ஜோதிகள்
பா.ஜ., கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அந்த கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: திறப்பு விழாவை தீபாவளிப் பண்டிகையைப்போல கொண்டாட வேண்டும். ஒரு நாள் மட்டும் இல்லாமல், இந்த பிரமாண்ட நிகழ்வை வரும் 14 முதல் 27 வரையில் இரு வாரங்களுக்கு, கொண்டாடி மகிழ வேண்டும். இந்த நாட்களில் நாடு முழுதும் உள்ள பா.ஜ., நிர்வாகிகள், அவரவர் பகுதிகளில் இருக்கும் கோவில்களை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்.திறப்பு விழா தினத்தன்று மாலை வேளையில் ஒவ்வொருவர்வீட்டிலும் ஐந்து தீபங்களை ஏற்ற வேண்டும். 'ராம ஜோதிகள்' என்றழைக்கப்படும் அவற்றை பக்தர்கள் மற்றும் பா.ஜ.,வினர்குடும்பத்துடன் வணங்க வேண்டும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
'தீஸ்ரி பார் மோடி சர்க்கார்'
முடிவானது தேர்தல் கோஷம்வரும் பொதுத் தேர்தலுக்குண்டான பிரதான கோஷத்தை பா.ஜ., தலைமை முடிவு செய்து விட்டது. பல்வேறு தரப்பிலிருந்து வந்த பல கோஷங்களை பரிசீலித்துவிட்டு, இறுதியாக, 'தீஸ்ரி பார் மோடி சர்க்கார், அப் கி பார் 400 ப்பார்' என்ற கோஷத்தை பா,ஜ., மேலிடம் தேர்வு செய்துள்ளது.'மூன்றாவது முறையும் மோடி அரசு, இந்த முறை, 400 இடங்களை தாண்டுவோம்' என்பதே இதன் பொருள். - நமது டில்லி நிருபர் -