உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டுறவு சங்க லாக்கரில் 50 சவரன் போலி நகைகள்

கூட்டுறவு சங்க லாக்கரில் 50 சவரன் போலி நகைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், எஸ்.புதுார் அருகே நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில், இணை பதிவாளர் தலைமையில் கூட்டுறவு அதிகாரிகள், சங்க லாக்கரில் உள்ள நகைகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.இதில், 13 பாக்கெட்களில் இருந்த 50 சவரன் நகைகள் போலி என, தெரியவந்தது. போலி நகைகளை அடமானமாக வைத்து, 18.67 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இணை பதிவாளர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.மாவட்ட அளவில் கூட்டுறவு துறையின் கீழ் 126 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இச்சங்கங்களில், 10 ஆண்டுக்கும் மேலாக ஒரே செயலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுபோன்ற காரணத்தால் கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை லாக்கரில் வைத்து, பல லட்சம் வரை தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கி, முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. மாவட்ட அளவில் அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் உள்ள நகைகளை பரிசோதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த மாவட்டத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் இதுபோன்ற மோசடி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Santhakumar Srinivasalu
மே 24, 2025 12:52

ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்யாமல் மேல் அதிகாரிகள் ஆய்வு செய்யாமல்இப்போது போலி நகை என்று கூறுவது என்த விதத்தில் ஞாயம்?


visu
மே 24, 2025 12:02

நகை வைக்கும்போது சோதித்துத்தானே வாங்குகிறார்கள் அப்ப ஏதாவது பிரச்சினை வந்தால் நகை மதிப்பீட்டாளரை கைது செய்யவும் அதுதான் நிரந்தர தீர்வு அந்தவேலைக்கு ஊதியமும் பெற்றுவிட்டு தவறு செய்தால் அந்த பதவியே தேவையில்லையே


Kasimani Baskaran
மே 24, 2025 07:32

கூட்டுறவு சங்கம் என்பது கொள்ளை அடிக்க வசதியாக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அதனால் பலருக்கு பயன் கிடையாது - ஒரு சிலர் மட்டுமே அனுபவித்து வருகிறார்கள். இடையிடையில் கடன் தள்ளுபடி என்கிற காமடி வேறு நடக்கும்..


R.RAMACHANDRAN
மே 24, 2025 06:35

கூட்டுறவு சங்கங்கள் கூடி கொள்ளை அடிப்பவர்களின் உயர்வுக்காகவே உள்ளன.அரிதினும் அரிதாக ஒரு சங்கத்தை பிடித்துள்ளனர்.சன்மானம் பெற்றுக்கொண்டு தப்பிக்க விட்டுவிடுவர்.


nagendhiran
மே 24, 2025 06:29

விடியல் சகஜம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை