மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
1 hour(s) ago
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
1 hour(s) ago | 13
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
2 hour(s) ago
சென்னை:துாத்துக்குடியில் கனிமொழி போட்டியிட அவருக்கு ஆதரவாக, 51 பேரும், பெரம்பலுார் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் போட்டியிட, 32 பேரும், சென்னை அறிவாலயத்தில் நேற்று விருப்ப மனுக்கள் அளித்தனர். தி.மு.க.,வில், லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினருக்கு, கடந்த மாதம், 19ம் தேதி முதல் விருப்ப மனு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.ஒரு படிவத்தின் விலை 2,000 ரூபாய். இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட படிவங்கள் விற்கப்பட்டு உள்ளன.அவற்றை வாங்கியவர்கள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் போது, ஒரு தொகுதிக்கு மனுவுக்கு, 50,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விருப்ப மனுக்களை பெறும் பணி நேற்று துவங்கியது; வரும், 7ம் தேதி வரை அவகாசம் உள்ளது.முதல் நாளான நேற்று, துாத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடும் வகையில், அவரது பெயரில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்ட, 51 பேர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.அதேபோல, மூத்த அமைச்சர் நேருவின் மகன் அருண், பெரம்பலுார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, நேற்று மட்டும் 32 பேர் விருப்ப மனுக்கள்வழங்கியுள்ளனர்.அதைத் தொடர்ந்து, தர்மபுரி தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் பழனியப்பன், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் உள்ளிட்டோரும் விருப்ப மனுவழங்கினர்.
1 hour(s) ago
1 hour(s) ago | 13
2 hour(s) ago