உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல்

தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல்

சென்னை: தகுந்த ஆவணம் இல்லாமல், 58 கிலோ எடை கொண்ட வெள்ளி கலைப் பொருட்கள், வெள்ளி பார்கள் மற்றும் 25 லட்ச ரூபாய் பணத்தை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை நகரில் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின்படி, சென்னை முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பூக்கடை பகுதியில் உள்ள லாட்ஜ்களிலும், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். என்.எஸ்.சி., போஸ் சாலையில் உள்ள ஆனந்த்பவன் லாட்ஜில் சோதனையிட்ட போது, அங்கு தங்கியிருந்த கோல்கட்டாவைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 26, தங்கியிருந்தார். அவர், தகுந்த ஆவணம் இல்லாமல் 58 கிலோ கொண்ட வெள்ளி கலைப் பொருட்கள், உருக்கிய பார்கள் மற்றும் 25 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பிடிபட்ட பொருட்கள் மற்றும் பணம் குறித்த ஆவணங்களை, போலீசார் கேட்டனர். அவர் முண்ணுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதனால், சந்தேகத்தின் பேரில், ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த யானைக்கவுனி போலீசார், மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி