உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூய்மை பணியாளர்களுக்கு 6 புதிய திட்டங்கள்: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

தூய்மை பணியாளர்களுக்கு 6 புதிய திட்டங்கள்: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.சென்னையில் ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துாய்மைப்பணியாளர்களை நேற்று இரவு போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், போலீசாருக்கும், அரசுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கைது நடவடிக்கையை கண்டித்து இன்று மாலை மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.இந்நிலையில் இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி:* தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போதி, அவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு சிகிச்சை அளிக்க தனித்திட்டம் செயல்படுத்தப்படும்.* பணியின் போது மரணம் அடையும் தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.* தூய்மை பணியாளர்கள் சுய தொழில் தொடங்கும் போது, அவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இந்த புதிய திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.* தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். * நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு வரும் 3 ஆண்டுகளில் 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.* தூய்மை பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதனை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து சாப்பிடுவதற்கும், பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்னைகளுக்கு தீர்வாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக காலை உணவு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

கைது செய்தது ஏன்?

சென்னையில் போராடிய தற்காலிக தூய்மைப் பணியாளர்களை கைது செய்தது ஏன்? என்ற கேள்விக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் 12 கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பொழுதும் கூட அரசின் கதவுகள் பேச்சுவார்த்தைக்கு திறந்திருக்கிறது. அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக் கொள்ளபடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ManiMurugan Murugan
ஆக 15, 2025 00:44

திரும்பவும் தவறான செய்தி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி ஊழியர்கள் சுய உதவிக் குழு அமைப்பு வழியாக வந்த பணியாளர்கள் பாக் காலமாக பணியில் உள்ளவர்கள் இப்போது ஒப்பந்த பணியாளர் களாக மாற்றுவதற்கு தான் போராட்டம் தற்காலிக பணியாளர் இல்லை பொய் யை திரும்ப திரிமப சொல்லி உண்மை யா க்குப் பார்க் கிறது அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி


C.SRIRAM
ஆக 14, 2025 23:30

இதில் பெரும்பானவை வேலைக்காகாது. சொன்னதை ஏன் செய்யவில்லை? த்ரவிட புளுகு


Bhaskaran
ஆக 14, 2025 20:38

காலை உணவு திட்ட ஒப்பந்தக்காரர் தினமும் உப்புமா தான் போடுவார் மாதம் ஒரு முறை மட்டும் இட்லி தோசை போட்டு விரைவில் கோடீஸ்வரர் ஆவார்


Kasimani Baskaran
ஆக 14, 2025 18:29

திட்டமெல்லாம் போடுவோம் - பணி நிரந்தரம் மட்டும் நகி


Nellai Ravi
ஆக 14, 2025 18:10

வீடு கட்டும் திட்டம், கலைகள் கனவு திட்டத்துக்கு மத்திய அரசு பணம் கொடுக்கிறது.


Indhuindian
ஆக 14, 2025 17:59

இதெல்லாம் நாங்க சொல்லாதது அதை செய்யறோம் ஆனா சொன்னதை- பணி நிரந்தரம் அதை மட்டும் செய்யமாட்டோம்


Kulandai kannan
ஆக 14, 2025 16:56

ஸ்டெர்லைட் போராட்டம், டெல்லி விவசாயிகள் போராட்டம் இனித்தது. இன்று....


D.Ambujavalli
ஆக 14, 2025 16:53

மூன்று வருஷத்தில் வேண்டாம் சொல்லிவிட்டு அடுத்த காட்சி தலையில் கட்டிவிட்டு, அவர்களை எதிர்த்து இதே போராட்டம், மறியல் எல்லாவற்றுக்கும் அடிப்போடுகிறார்1 கைக்கு கிளவுசும், மருந்தும் என்று தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிக்குப் புனுகு பூசுகிறார் அந்த காண்ட்ராக்டர் மூலம் என்னென்ன பெரும்பயன்கள் கிடைத்ததோ, கிடைக்கப்போகிறதோ?


Balaa
ஆக 14, 2025 16:01

இவர்கள் தெலுங்கு கான்ட்ராக்டர் ரெட்டிக்கு துட்டுக்கு வழி பண்ணுவதற்கு இந்த எளிய மக்களை வஞ்சிக்கிறார்கள். இதற்கு பெயர் தான் திமுக திராவிட மாடல்.


ASIATIC RAMESH
ஆக 14, 2025 15:35

அனைத்தும் செயல்படுத்தப்படும்..... வழங்கப்படும் ..... படும் ...... எப்ப .... மீண்டும் அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை