உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 முருகன் கோவிலுக்கு சுற்றுலா பஸ் இயக்கம்

6 முருகன் கோவிலுக்கு சுற்றுலா பஸ் இயக்கம்

தஞ்சாவூர்:டெல்டா மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற ஆறு முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில், ஆன்மிக சுற்றுலாவுக்கு, கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. புதிய பஸ் சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பஸ் கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, 6:30 மணிக்கு புறப்படும். திருவாரூர் மாவட்டம், எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோவில், நாகை மாவட்டம், சிக்கல் சிங்கார வேலர் கோவில், பொரவாச்சேரி கந்தசுவாமி கோவில், எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில், திருஏரகரம் கந்தசுவாமி கோவில் ஆகியவற்றுக்கு செல்லும்.மாலை, 6:30 மணிக்கு மீண்டும் கும்பகோணம் வந்தடையும். ஒரு நபருக்கு, 650 ரூபாய் கட்டணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை