தமிழகத்தில் நாலரை ஆண்டுகளில் 6500 படுகொலைகள்: எச்.ராஜா
சிவகங்கை:''தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 6500 படுகொலைகள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளது,'' என, சிவகங்கையில் நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா சாடினார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் கரூரில் மிக துயரமான சம்பவம் நடந்தது. தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் விலை மதிப்பற்ற 41 உயிர்கள் பலியாயின. இதற்கு மாநில அரசின் நிர்வாக சீர்கேடுகள் தான் காரணம். காவல்துறை, மாவட்ட நிர்வாகம் தி.மு.க.,வின் குரல்களாக மாறிவிட்டன. இந்த சம்பவத்திற்கு பொறுப்பு எஸ்.பி., தான். அவர் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. தி.மு.க., அரசு இப்பிரச்னையில் நாடகமாடுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ypia6ji4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததே தி.மு.க., தான். அது தெரியாமல் முதல்வர் பேசுகிறார். தி.மு.க.,விற்கு அரசியல் நேர்மை கிடையாது. நான்கரை ஆண்டுகளில் 6,500 படுகொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகளும் நடந்துள்ளது. தி.மு.க., அமைச்சர்கள் 15 பேர் ஊழல் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின் மக்களை திசை திருப்பும் வேலையில் ஈடுபடாமல் மீதமுள்ள 6 மாதத்திலாவது ஒழுக்கமாக அரசை நடத்த வேண்டும். தி.மு.க., அணையபோகிற விளக்கு. 2026 மே மாதம் தி.மு.க.,விற்கு இறுதி காலமாக இருக்கும் என்றார்.