உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சத்துணவு ஊழியர்களின் 7 கட்ட போராட்டம் துவக்கம்

சத்துணவு ஊழியர்களின் 7 கட்ட போராட்டம் துவக்கம்

சென்னை:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஏழு கட்ட போராட்டம் நேற்று துவங்கியது. முதல் கட்டமாக, மாவட்ட தலைநகரங்களில் நேற்று சாலை மறியல் நடத்தப்பட்டது. சென்னையில் நேற்று, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த மறியல் போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; 60,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; குறைந்தபட்சமாக, 6,750 ரூபாய் ஓய்வூதியம் வேண்டும் உள்ளிட்டவை, எங்களது பிரதான கோரிக்கைகள். இவற்றை வலியுறுத்தி, கடந்த நான்கு ஆண்டுகளில், 50க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம்; ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாநிலம் முழுதும் ஏழு கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டு, இன்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம். அக்., 20ம் தேதி திருச்சியில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்பட உள்ளது. அதன்பின், தொடர்ச்சியாக தற்செயல் விடுப்பு போராட்டம், சென்னையில் பேரணி, மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்தம் நடத்தப்படும். இறுதி கட்டமாக, 2026 பிப்., 14ம் தேதி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இது, அரசுக்கு நாங்கள் விடுக்கும் இறுதி எச்சரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை