உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐபிஎஸ் அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்; சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக மகேஸ்வர் தயாள் நியமனம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்; சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக மகேஸ்வர் தயாள் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

ஐபிஎஸ் அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக மகேஸ்வர் தயாளை நியமனம் செய்து தமிழகம் அரசு உத்தரவிட்டுள்ளது.2026ம் ஆண்டுக்கான ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்களுக்கான பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது.சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு ஆயுதப்படை டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக மகேஸ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

1. மகேஸ்வர் தயாள் - சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமனம்2. சந்தீப் மிட்டல்- சைபர் குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம்3. பி.பாலநாகதேவி- பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம்4. டி.எஸ்.அன்பு- சைபர் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம்5. பிரேம் ஆனந்த் சின்ஹா- ஆவடி போலிஸ் கமிஷனராக நியமனம்6. தீபக் எம்.தாமோர்- மத்திய அரசு பணிக்கான ஏடிஜிபியாக நியமனம்7. செந்தில்குமார்- தலைமையிட ஏடிஜிபியாக நியமனம்.8. அனிசா உசேன்- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமனம்.9. நஜ்முல் ஹோடா- சென்னை, செயல்பாடுகள் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநராக நியமனம்10. டேவிட்சன் தேவாசீர்வாதம்- ஆயுதப்படை டிஜிபியாக நியமனம்11. மகேந்தர் குமார் ரத்தோட்- காவல்துறை தலைமையக ஏடிஜிபியாக நியமனம்.12. கே.சங்கர்- சிறைத்துறை ஏடிஜிபியாக நியமனம்.13. அமல்ராஜ்- தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமனம்.14. அபின் தினேஷ் மோடாக்- அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி ஆக நியமனம்.15. தினகரன்- வண்டலூர் தமிழக போலீஸ் பயிற்சி அகாடமி ஏடிஜிபியாக நியமனம்.16. மாதவன்- திருநெல்வேலி மாநகரம், மேற்கு மண்டலத்தின் துணை கமிஷனராக நியமனம்.17. மதிவாணன்- மதுரை மாநகரம், வடக்கு மண்டல துணை கமிஷனராக நியமனம்18.பாண்டியராஜன்- தமிழ்நாடு சிறப்பு காவல் படை எஸ்பியாக நியமனம்.19. மகேஸ்வரி- தமிழக கமாண்டோ படை எஸ்பியாக நியமனம்.20. போகார்த்திக் குமார்- பள்ளிக்கரணை, தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமனம்இவர்கள் அனைவரும் பதவி உயர்வில் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
டிச 31, 2025 06:59

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு ஆயுதப்படை டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது என்ற செய்தியைப்படித்ததும் எனக்கு என்ன தோன்றியது என்றால், வரும் 2026 தேர்தல் அறிவிப்பு வர சில தினங்கள் இருக்கும் பொது, இவர் தமிழக காவல்துறை டிஜிபி யாக நியமிக்க திருட்டு தீய திமுக அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம்தான்.


மேலும் செய்திகள்