உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள 8 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள்

அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள 8 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை எப்போது நிரப்பப்படும் என அரசு கலைக் கல்லுாரி ஆசிரியர் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.மாநில அளவில் 164 அரசு கலை அறிவியல், 7 கல்வியியல் கல்லுாரிகள்உள்ளன. இவற்றில் 5 ஆயிரம் பேர் தான் நிரந்தர ஆசிரியர்களாக உள்ளனர். மீதமுள்ள பணியிடங்களில் ரூ. 25 ஆயிரம் சம்பளத்தில் கவுரவ விரிவுரையாளர்கள், ரூ. 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சம்பளத்தில் பி.டி.ஏ., மூலமும் பணியாற்றுகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சி, 41 பல்கலை உறுப்புக் கல்லுாரிகளை அரசு கல்லுாரிகளாக மாற்றம் செய்தது. தி.மு.க., ஆட்சியில் புதிதாக துவக்கப்பட்ட 21 கல்லுாரிகளில் தற்காலிகமாக பணியாற்றுவோர் மிக அதிகம்.அரசு கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் வெளிப்படையாக ஆர்வம்உள்ளதாக கட்சியினர் காட்டிக்கொண்டாலும், குழப்பமான அறிவிப்புகளை வேண்டுமென்றே விடுத்து, அதுதொடர்பாக நீதிமன்ற வழக்குகளாக தொடரப்பட்ட பின், 'நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது' என காரணம் காட்டி அந்த நடவடிக்கையை கிடப்பில் போடுவதை ஆளும் கட்சியினர் மறைமுக கொள்கையாக பின்பற்றுகின்றனர்.இதுபோல் தான் தி.மு.க., ஆட்சியில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அ.தி.மு.க., ஆட்சியில் ஏற்கனவே உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை நியமிப்பது தொடர்பான அரசு உத்தரவை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பலர் நீதிமன்றத்தை நாடினர். இதனால் அதுதொடர்பான நியமனங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு கலைக் கல்லுாரி ஆசிரியர் கழகம் பொதுச் செயலாளர் சுரேஷ் கூறியதாவது: தற்போதைய நிலையில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் 4 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவர் என 2022ல் அப்போதைய அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.ஆனால் அதற்கான முறையான அறிவிப்பு 2024, மார்ச்சில் தான் வெளியானது. அதற்கிடையே அ.தி.மு.க., ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசு உத்தரவை ரத்து செய்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். நீதிமன்ற வழக்குகளை விரைவுபடுத்தி தகுதியானவர்களை விரைவில் நியமிக்க உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

SANKAR
டிச 26, 2024 09:53

மீதம் உள்ள 4000 பணி இடங்களில் அண்ணாமலை ஊழியர்களிடம் காசு வாங்கி கொண்டு அவர்களை நிரந்திர பேராசிரியர்களாக மாற்ற திட்டம், இது புரியாத ஆசிரியர் கழகம்


N.Purushothaman
டிச 26, 2024 09:38

முதுநிலை படிப்பு வரைக்கும் ஆல் பாஸ் தான்... அதனால் வாத்தியார்கள் ,பேராசிரியர்கள் என யாரும் தேவை இல்லை ....சிக்கனம் ....திராவிட மாடல் ஹை ...


Barakat Ali
டிச 26, 2024 07:13

தமிழ்நாடு வல்லரசாயிடும் ....


N.Purushothaman
டிச 26, 2024 13:49

சமூக நீதி காத்தான் பதவியேற்றதும் தமிழகம் வல்லரசாகிடுச்சி ....


veera
டிச 26, 2024 06:36

அதுதான் ஆல் பாஸ் சொல்லிடோமே...அதுக்கு அப்புறம் எதுக்கு காலேஜ் எதுக்கு ஆசிரியர்..... ஆல் பாஸ். போங்கப்பா


Kasimani Baskaran
டிச 26, 2024 06:24

மாணவர்கள் திராவிடமாடலில் தானே படித்துக்கொள்ள வேண்டும் போல. பாமரர் எங்கிருந்தாலும் ஓடி வந்து முட்டுக்கொடுக்கவும்.


N.Purushothaman
டிச 26, 2024 14:15

எவ்வளவு செய்திகளுக்கு தான் முட்டு கொடுக்குறதுன்னு மனம் வெம்பி போயி கெடக்காங்க திருட்டு திராவிட அனுதாபிகள் ....


சம்பா
டிச 26, 2024 06:04

தேர்தலுக்கு முன்பு


Mani . V
டிச 26, 2024 06:01

எங்களுக்கு கல்வி வளர்ச்சி முக்கியமில்லை. டாஸ்மாக் வேண்டுமா? கேளுங்கள். உடனே அமைத்துத் தருகிறோம். வருங்கால சந்ததியை சீரழிப்பதே எங்களின் குறிக்கோள்.


சம்பர
டிச 26, 2024 06:03

தேர்தலுக்கு முன்பு எல்லா காலியிடமும் நிரப்பபடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை