8,039 ரயில்வே பாலங்கள்l 4 ஆண்டுகளில் புதுப்பிப்பு
சென்னை: 'நாடு முழுதும், கடந்த 2022 முதல் 2025 அக்டோபர் வரை, மொத்தம் 8,039 பாலங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வேயின் கீழ், நாடு முழுதும், 18 மண்டலங்கள் உள்ளன. அதுபோல், மொத்தம் 37,000 பாலங்கள் உள்ளன. இவற்றில், 70 சதவீத பாலங்கள், 100 ஆண்டுகளை கடந்துள்ளன. எனவே, ரயில்கள் இயக்கம், வேகம் அதிகரிப்புக்கு, பாலங்கள் சீரமைப்பு பணிகள், அவசியமாக உள்ளது. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே சார்பில், பாலங்கள் புதுப்பிப்பு, பழைய பாலங்களை அகற்றிவிட்டு புதிதாக பாலங்கள் கட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு முதல் கடந்த அக்., மாதம் வரை, 8,039 பாலங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. படிப்படியாக அனைத்து பாலங்களையும் சீரமைக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் 2030க்குள், கூடுதலாக 6,000 பாலங்களை புதுப்பிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.