உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்.எல்.சி., புதிய மின் நிலையத்தில் தமிழகத்திற்கு 830 மெகாவாட் ஒதுக்கீடு

என்.எல்.சி., புதிய மின் நிலையத்தில் தமிழகத்திற்கு 830 மெகாவாட் ஒதுக்கீடு

சென்னை: கடலுார் மாவட்டம் நெய்வேலியில், என்.எல்.சி., எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அமைக்கும் புதிய அனல் மின் நிலையத்தில் இருந்து, தமிழகத்திற்கு 830 மெகா வாட் மின்சாரத்தை, மத்திய மின் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. கடலுார் மாவட்டம் நெய்வேலியில், மத்திய அரசின் என்.எல்.சி., நிறுவனத்திற்கு, 3,390 மெகாவாட் திறனில் நான்கு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து தமிழகத்திற்கு தினமும், 1,730 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதி மின்சாரம், மற்ற மாநிலங்களுக்கு தரப்படுகிறது. நெய்வேலியில் தலா, 500 மெகாவாட் திறனில், இரு அலகுகள் உடைய இரண்டாம் விரிவாக்க அனல் மின் நிலையத்தை, என்.எல்.சி., நிறுவனம் அமைக்க உள்ளது. இதில், உற்பத்தி செய்யப்பட உள்ள மின்சாரத்தில், 830.44 மெகாவாட்டை தமிழகத்திற்கும், 19.56 மெகாவாட்டை புதுச்சேரிக்கும் மத்திய மின்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. மீதமுள்ள 150 மெகாவாட் மின்சாரம், எந்த மாநிலத்திற்கும் ஒதுக்கப்படாமல் மத்திய அரசிடம் இருக்கும். இந்த மின்சாரத்தை, மின் தேவை அதிகம் உள்ள மாநிலங்களுக்கு சுழற்சி அடிப்படையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி