உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு த.வெ.க., கூட்டத்துக்கு போலீசார் விதித்த 84 நிபந்தனை

ஈரோடு த.வெ.க., கூட்டத்துக்கு போலீசார் விதித்த 84 நிபந்தனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சரளையில் வரும், 18ம் தேதி நடக்கும், த.வெ.க., பிரசார கூட்டத்துக்கு, ஈரோடு மாவட்ட போலீசார், 84 நிபந்தனைகள் விதித்துள்ளனர். இதுகுறித்த பட்டியல் பெருந்துறை பகுதி கட்சி பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.போலீசார் விதித்துள்ள நிபந்தனைகள்:* பிரசார வேனை சுற்றி நான்கு புறமும் மக்களுக்கும், வேனுக்கும் இடையே, 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.* மக்கள் உள்ளே, வெளியே வந்து செல்வது குறித்த வரைபடம்* பொதுமக்கள் வந்து செல்லும் போது தள்ளுமுள்ளு இல்லாத வகையில் கூட்டத்தை கட்டுப்படுத்த தன்னார்வலர்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.* மனுவில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மக்கள் வர அனுமதிக்க கூடாது* மருத்துவ குழு மற்றும் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய வேண்டும். எத்தனை மருத்துவ குழு, எத்தனை ஆம்புலன்ஸ் நிறுத்தப்படும் என்ற விபரத்தை அளிக்க வேண்டும்.* 'சிசிடிவி' கேமரா, எல்.இ.டி. திரைகளின் எண்ணிக்கை விபரம் வழங்க வேண்டும்.* அவசர காலத்தில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்லும் வகையில் தனி வழி விட வேண்டும்.* மின் கம்பங்கள், மரங்கள், உயரமான கட்டடங்கள், விளம்பர போர்டுகள் மீது தொண்டர்கள் ஏறி நிற்காமல் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட, 84 நிபந்தனைகளை போலீஸ் தரப்பில் விதிக்கப்பட்டுள்ளதாக, பெருந்துறை பகுதி த.வெ.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Gajageswari
டிச 16, 2025 05:26

விஜய் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள கூடாது என்ற நிபந்தனையும் தேவை


Mani . V
டிச 16, 2025 05:08

ஆனால், ஒன்றுக்குமே பிரயோசனமில்லாத, காட்டாட்சி நடத்தும் அப்பா, துணை அப்பா இவர்களுக்கு மட்டும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.


Satheesh
டிச 16, 2025 07:35

அவர்கள் 200rupees கொடுத்து ஆட்கள் அளவாக கூட்டி வருவார்கள்.விஜய் க்கு மக்கள் தானாக வருகிறார்கள்.


Kasimani Baskaran
டிச 16, 2025 03:58

வெறும் 84 நிபந்தனைகளை வைத்துதான் வரி ஏய்ப்பனை பிரபலப்படுத்த வேண்டும் என்றால் அதுவும் நடக்கும்.


Ravi Manickam
டிச 16, 2025 00:34

இதுதான் அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கான SOP யா, அனைத்து கட்சிகளும் இது பொருந்துமா? இல்லை தவெகவிற்கு மட்டுமா?


தாமரை மலர்கிறது
டிச 15, 2025 23:43

தன்னை வெகுநேரம் பக்கத்தில் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக வேனில் உள்ள லைட்டை அவ்வப்போது அணைத்து வைப்பது போன்ற செயல்களை தடுக்க நிபந்தனை விதிக்கவேண்டும்.


தாமரை மலர்கிறது
டிச 15, 2025 23:39

திமுக அரசின் அடக்குமுறையை கண்டிக்கமுடியவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை