உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 90 நாட்கள் கெடாத ஆவின் பால் நிறுத்தம்; பருவமழை காலத்தில் நுகர்வோர் ஏமாற்றம்

90 நாட்கள் கெடாத ஆவின் பால் நிறுத்தம்; பருவமழை காலத்தில் நுகர்வோர் ஏமாற்றம்

சென்னை: பேரிடர் உள்ளிட்ட அவசர காலங்களில் பயன்படுத்தப்படும், 90 நாட்கள் கெடாத ஆவின் பால் பாக்கெட் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது, நுகர்வோரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆவின் சார்பில் தினமும், 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதை கொழுப்பு சத்து அடிப்படையில் பிரித்து, ஆரஞ்ச், பச்சை, நீலம், பிங்க் நிற பாக்கெட்டுகளில் அடைத்து, ஆவின் விற்பனை செய்கிறது.

பல கோடி ரூபாய் செலவு

ஊதா நிறத்தில் பசும் பால் விற்பனையும் நடக்கிறது. அது மட்டுமின்றி, பச்சை, வெள்ளை நிறம் கலந்த பாக்கெட்டில், 90 நாட்கள் கெடாத பால், 2022 நவம்பரில் அறிமுகமானது. இதை குளிர்சாதன பெட்டியில் வைக்காமல், திறந்தவெளியில் வைத்திருந்து பயன்படுத்தலாம். பாலில் பாக்டீரியாக்கள் முழுதும் நீக்கப்பட்டதாலும், ஏழு லேயர் பாலிதின் பயன்படுத்தி பாக்கெட் உருவாக்கப்பட்டதாலும் பால் கெடுவதில்லை. இந்த பால் பாக்கெட் தயாரிக்க, சோழிங்கநல்லுார் பால் பண்ணையில், தினமும் ஒரு லட்சம் லிட்டர் பேக்கிங் செய்யும் திறன் உடைய கட்டமைப்பு வசதிகள், பல கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டன. இந்த பாலில், 3.5 சதவீதம் கொழுப்பு, 8.5 சதவீதம் மற்ற சத்துக்கள் இருக்கும். தொலைதுார பயணம் செல்வோருக்கும், மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும், இந்த பால் பாக்கெட் பெரிதும் உதவும் என்றும் ஆவின் நிறுவனம் கூறியது. அதன்படி, கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலின் போது, இந்த பால் பாக்கெட்டுகள் பொதுமக்களுக்கு அதிக அளவில் கைகொடுத்தன.

லாபம்

பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவன கேன்டீன்களுக்கும், இந்த பால் பாக்கெட்டுகள் சப்ளை செய்யப்பட்டன. இந்த வகை பால், அரை லிட்டர், 30 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் ஆவினுக்கும் லாபம் கிடைத்தது.இருப்பினும், இந்த பால் பாக்கெட் உற்பத்தியை, நஷ்டம் எனக்கூறி ஆவின் நிறுவனம் நிறுத்தி உள்ளது. கடந்த மழையின் போது, ஆவின் பாலகங்களில் இந்த பால் பாக்கெட்டுகளை கேட்டு, பொதுமக்கள் படையெடுத்தனர். ஆனால், பாக்கெட் இல்லாததால், பலரும் ஏமாற்றம் அடைந்தனர். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த பால் பாக்கெட்டுகளை, போதிய அளவில் உற்பத்தி செய்து இருப்பு வைக்க, புதிய பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இதேபோல, பலகாரங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும், 500 மி.லி., உப்பு கலந்த வெண்ணையும் கையிருப்பில் இல்லை. இது, தீபாவளி நேரத்தில் பலகாரங்கள் தயாரிக்கும் இல்லத்தரசிகளுக்கு மட்டுமின்றி, வர்த்தக ரீதியாக அவற்றை பயன்படுத்துவோருக்கும், ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

suresh guptha
அக் 21, 2024 15:49

WHO SAID 1.ALL MIGHT GONE TO RULING PARTY POLITICIAN AND THEIR FAMILY FOR THEIR SAFETY 2.TO HELP PRIVATE DIARY PEOPLE 3.IT IS NOT TASMAC TO ACHIEVE TH TARGET,IF IT RUN IN LOSS,RAISE COST OF MILK ,FURTHER PRIVATE DIARY WILL GET MORE PROFIT,BECAUSE MOST OF THE PRIVATE DIARIES POLITICIANS PARTNER SHIP WILL BE THERE


Krishna Gurumoorthy
அக் 21, 2024 07:00

ஆவின் உற்பத்தி குறைப்பு கவின் க்கு செய்யும் ஊழியம்


vadivelu
அக் 21, 2024 08:02

எவ்வளவோ அசையா சொத்து இருக்கு.. ம்


Dharmavaan
அக் 21, 2024 06:42

தனியார் பாலுக்கு உதவ இந்த திருட்டுத்தனம்


Kasimani Baskaran
அக் 21, 2024 05:12

ஆவின் என்ன டாஸ்மாக்கா. ஆவின் அதிகம் விற்பனை செய்தாலும் செய்யாவிட்டாலும் முக்கியப்புள்ளிகளுக்கு லாபம் வராதே... ஆக மொத்தத்தில் ஆவின் நிர்வாகம் ஒழுங்காக வேலை செய்யவில்லை போல தெரிகிறது.


raja
அக் 21, 2024 05:02

விடியல் டா ..திருட்டுடா... திராவிடம் டா...மாடல்டா... காறி துப்புடா...


சமீபத்திய செய்தி