உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பா.ஜ.,வில் ஒற்றுமையில்லை ஆளாளுக்கு ஒரு கருத்து

 பா.ஜ.,வில் ஒற்றுமையில்லை ஆளாளுக்கு ஒரு கருத்து

கோவை, மதுரையில் செயல்படுத்த திட்டமிட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது. காரணம், மக்கள் தொகை குறைவு என சொல்லி உள்ளனர். அது தான் உண்மையான காரணம் என்றால், கோவையை விட மக்கள் தொகை குறைவாக உள்ள இந்துாரில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது? கோவை ஒரு தொழில் நகரம். மதுரை ஆன்மிக பூமி. இங்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதன் வாயிலாக பல லட்சம் பேர் போக்குவரத்தில் பயனடைவர். எங்கள் ஆட்சி அமைந்தால், கோவை மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான வானதி கூறியிருக்கிறார். 'வானதி, தன் ஊருக்கு திட்டம் வரவில்லை என்பதால் அப்படி சொல்கிறார்' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் சொல்லியுள்ளார். இந்த விஷயத்தில், பா.ஜ.,வுக்குள்ளேயே கருத்து முரண் இருக்கிறது. இப்படித்தான், பா.ஜ.,வினர் தமிழகத்தை ஏமாற்றி வருகின்றனர். - சிவசங்கர், தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ