உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக் 21ல் வங்கக்கடலில் உருவாகுது காற்றழுத்த தாழ்வு: இன்று 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

அக் 21ல் வங்கக்கடலில் உருவாகுது காற்றழுத்த தாழ்வு: இன்று 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dm68yty0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் அக்டோபர் 21ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும்.இன்று (அக் 18) நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், கரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.நாளை (அக் 19) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.அக் 20ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.அக்டோபர் 22ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.அக்டோபர் 23ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Field Marshal
அக் 18, 2025 17:06

சென்னை சாலைகளில் நடக்கவே சங்கடமாக இருக்கிறது .தோல் வியாதிகள் மற்றும் சுவாசக்குழாய் பாதிப்பு நிச்சயம்


sundarsvpr
அக் 18, 2025 16:25

கன மழை பெய்த விபரம் ஒரு செய்தி தான். பெய்த மழையால் எவ்வளவு ஏரிகள் குளங்கள் கண்மாய்கள் பெருகின எவ்வளவு நீர் கடலில் போய் சேர்ந்தது என்ற விபரங்கள் ஏன் தெரிவிப்பதில்லை. இப்போது தார் ரோடு பூமிக்கு அடியில் நீர் தேங்க இயலாது. மண் தரை இருக்கும்போது வீடுகளிலுள்ள கிணறுகளில் நீர் உயரும் இதனை கண்டு மகிழ்ந்த காலம் போய்விட்டது. கிணற்று நீர் சுத்தமாய் இருக்கும் காய்ச்சி குடிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.


raja
அக் 18, 2025 15:48

வங்கக்கடலில் கனமழை பெய்து வருகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை