உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜோடிக்கப்பட்ட வழக்கு; நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ப.சிதம்பரம் கருத்து

ஜோடிக்கப்பட்ட வழக்கு; நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ப.சிதம்பரம் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்டது. இந்த வழக்கில், நீதிபதி சிறந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.சென்னையில் நிருபர்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது: மற்றவர்கள் மீது தொடுக்கப்பட்ட, ஜோடிக்கப்பட்ட வழக்கு. இந்த வழக்கில், நீதிபதி சிறந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார். பண பரிமாற்றம் என்பது குற்றம் அல்ல. நாள்தோறும் ஒவ்வொருவரும் பணப்பரிமாற்றம் செய்கிறோம். சம்பளம் வாங்கும் போது பணப்பரிமாற்றம், சம்பளம் கொடுக்கும் போது பணப்பரிமாற்றம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q71ys6ix&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடையில் ஒரு பொருளை வாங்கும் போது விற்கும் போது பணப்பரிமாற்றம் தான். சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் தான் குற்றம். சட்டத்தை மீறிய பணப்பரிமாற்றம் தான் குற்றம். அதுக்கு முதலில் குற்றம் நடைபெற வேண்டும். அந்த குற்றத்தில் போலீசாரோ அல்லது புலனாய்வு துறையோ ஒரு வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கில் இந்த குற்றத்தை இவர்கள் செய்து இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்ட வேண்டும். அந்த குற்றத்தை பதிவு செய்த பிறகு, அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற வழக்கை தொடங்கலாம்.இதில், எந்த போலீசாரும், எந்த மத்திய புலனாய்வு துறையும் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. எப்ஐஆர் ஏதும் கிடையாது. முதல் தகவல் அறிக்கை இல்லாத ஒரு வழக்கில், அமலாக்கத்துறை ஒரு குற்றத்தை பதிவு செய்தது. அது சட்டவிரோதம். அவர்களுக்கு இந்த நீதிபதியின் தீர்ப்பு பாடமாக இருக்கும். மஹாத்மா காந்தி 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி கொல்லப்பட்டார். ஏறத்தாழ 77 ஆண்டுகளுக்கு பிறகு மஹாத்மா காந்தியின் பெயரை நீக்கி, என்னை பொறுத்தவரை இது அந்த கொலையை விட, அந்த கொலைக்கு ஈடாக கொடிய செயல். 2வது முறை மஹாத்மா காந்தியை கொல்கிறார்கள். மஹாத்மா காந்தியின் பெயரை எடுப்பது ஒன்று. வாயில் நுழையாத பெயர் வைத்து இருக்கிறார்கள். ஹிந்தி சொற்களை ஆங்கில எழுத்தில் எழுதினால், அது ஹிந்தியா? ஆங்கிலமா? ஹிந்தியும் அல்ல, ஆங்கிலமும் அல்ல. உதாரணமாக தமிழ் எழுத்துகளை வங்காளத்தில் எழுதினால், தமிழர்களுக்கும் புரியாது, வங்காளிகளுக்கு புரியாது. ஹிந்தி சொற்களை ஆங்கிலத்தில் எழுதினால், ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும் புரியாது, ஹிந்தி தெரிந்தவர்களுக்கும் புரியாது. யாருக்கு புரிகிறது, அமைச்சர்களும் புரியவில்லை. மஹாத்மா காந்தி விட இந்த திட்டத்திற்கு புதிய பெயர் பொருத்தமானதா? இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

SUBBU,MADURAI
டிச 22, 2025 05:34

தமிழகத்தில் கட்டுமரத்திற்கு அடுத்த ஊழல்வாதி யார் என்றால் அவரே கூறிய இந்த சிவகங்கை சின்னப் பையன் என்கிற அப்பச்சிதான்...


sankaranarayanan
டிச 21, 2025 22:13

நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். ஆமாம் முற்றிலும் உண்மைதான்


Madhavan
டிச 21, 2025 22:04

பாகிஸ்தானில் உயிர்த்தெழ வேண்டி நம் நாட்டு கரன்சி அச்சடிக்கும் இயந்திரங்களை காகிதம், மையோடு கொடுத்து சேவை செய்தவர்.


Suresh
டிச 21, 2025 20:16

கேரளா-தமிழகத்தைத் தவிர ஹிந்தி தெரிந்த மற்ற மாநிலங்களில் ஒருபயல் இவரை மதிக்கப்போவதில்லை. துரந்தர் சினிமாவில் இவரும் இவர் மகனும் பாகிஸ்தானுக்கு 500ரூ, 1000ரூ பிளேட்டுகளை கொடுத்த கதை வெளிவந்துவிட்டது


theruvasagan
டிச 21, 2025 17:52

என்னமோ நீதிபதி குற்றம்சாட்டப்பட்டவர்களை நிரபராதிகள் என்று தீர்ப்பு வழங்கிவிட்ட மாதிரி கயிறு திரிக்கும் இந்தாளு உணமையிலேயே சட்டம் படித்தவர்தானா.


bharathi
டிச 21, 2025 17:38

Boomikku Bharam


sivaram
டிச 21, 2025 17:09

பழைய செந்தில் & கவுண்டமணி சினிமா வசனம் , டேய் நீ யார்னு எனக்கு தெரியும் ,நான் யார்னு உனக்கு தெரியும் , நம்ம 2 பேரும் எப்பேர்பட்டவனுங்கன்னு இந்த ஊருக்கே தெரியும் ,


vbs manian
டிச 21, 2025 16:40

ஆமாம். போபோர்ஸில் ஆரம்பித்து கமென்வெல்த் நிலக்கரி ஹெலிகாப்டர் பாகிஸ்தானுக்கு சென்ற இந்தியா மின்டிங் மெஷின் வரை எல்லாமே ஜோடிக்க பட்டவை. இந்த உண்மை விளம்பி இந்தியாவின் பாக்கியம்.


Sudha
டிச 21, 2025 16:33

இவர்களை வெளியே விட்டு வைத்திருக்கும் பிஜேபி அரசு உண்மையிலேயே முட்டாள்கள்


Iyer
டிச 21, 2025 14:55

நீதிபதிகள் என்ற பெயரில் நீங்கள் COLLEGIUM மூலம் நியமித்த ஊழல் பெருச்சாளிகள் - இன்னும் நீதித்துறையில் இருந்து கொண்டுதான் இருக்கிறான்கள். மோதி நீதித்துறையை சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார். வெகு விரைவில் உம்மைப்போன்ற திருடர்கள் கம்பி எண்ணப்போவது உறுதி.


சமீபத்திய செய்தி